Category Archives: Marthandam

ஒக்கி புயலில் மாயமான மீனவர்களை விரைவாக மீட்கக்கோரி ரயில் மறியல்

nagercoil-protest

ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்று நடுக்கடலில் மாயமாகியுள்ள மீனவர்களை விரைந்து மீட்கக்கோரி கன்னியாகுமரியில் 10,000-க்கும் மேற்பட்டோர் ரயில் மறியலில் ஈடுபட்டுள்ளனர். மீட்புப்பணிகளில் அரசு மெத்தனமாக இருப்பதாக அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

‘ஒக்கி’ புயலால்  கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் கடும் சேதத்தை ஏற்படுத்தியது. புயலின்போது ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்று நடுக்கடலில் மாயமாகியுள்ள மீனவர்கள் மற்றும் படகுகளை மீட்கும் பணியில்  இந்தியக் கடலோர காவல்படை கப்பல்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில் குமரி மாவட்டத்தைச் சேர்ந்த 1,013 மீனவர்கள் கரை திரும்பவில்லை என்று மீனவக் குடும்பங்களும் பிரதிநிதிகளும் குற்றம்சாட்டுகின்றனர்.

இதுகுறித்துக் கூறும் அவர்கள், ”குமரி மாவட்ட மீனவர்கள் அனைவரும் ஆழ்கடலுக்குச் சென்று, அங்கேயே தங்கி மீன் படிப்பவர்கள்.குறிப்பாக தூத்தூர் சுற்றுவட்டாரப் பகுதி மீனவர்கள் ஆழ்கடலுக்குச் செல்கின்றனர்.

ஒக்கி புயல் குறித்த முறையான முன்னறிவிப்பு இல்லாததால், அவர்கள் கடலுக்குள் சென்று மாயமாகியுள்ளனர். அவர்களை மீட்பதில் அரசு மெத்தனமாக செயல்படுகிறது.

ஏராளமான மீனவர்கள் லட்சத்தீவுகளில், மகாராஷ்டிரத்தில் மற்றும் பல்வேறு இடங்களில் பத்திரமாக உள்ளதாக அரசு கூறுகிறது. ஆனால் அவர்கள் ஏன் இன்னும் ஊர் திரும்பவில்லை’’ எனக் கேள்வி எழுப்புகின்றனர்.

மாயமான 1,013 மீனவர்களை உடனடியாக மீட்க வேண்டும். மீனவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த ஹெலிகாப்டர்கள், அதிவேக போர்க்கப்பல்களை பயன்படுத்தி, மீட்புப் பணியை விரைவுப்படுத்த வேண்டும் என்று தெரிவித்து மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

nagercoil-protest

இரு குழுக்களாகப் பிரிந்து போராட்டம்

இந்த போராட்டத்தில் இறையுமன்துறை முதல் இரவிக்குப்பன்துறை வரையுள்ள கடலோர கிராம மக்கள் ஈடுபட்டுள்ளனர். பாதிரியார்கள் ஆண்ட்ரோ மற்றும் ஹெவின்சன் தலைமையில் மீனவ குடும்பங்கள் தமிழக கேரள எல்லைப் பகுதியான சின்னத்துறையில் இருந்து குழித்துறையை நோக்கிப் பேரணி நடத்தி வருகின்றனர்.

நீரோடியில் இருந்து வல்லவிளை வரை உள்ள சுற்றுவட்டார கிராம மீனவ மக்கள், கொல்லங்கோட்டில் இருந்து குழித்துறையை நோக்கி  சென்றனர். இரண்டு தரப்பிலும் இருந்து சுமார் 10,000 பேர் இந்தப் பேரணியில் ஈடுபட்டுள்ளனர்.

முன்னதாக குழித்துறை ரயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபடுவதாக அவர்கள் அறிவித்திருந்தனர். ஆனால் அதற்கு அனுமதி மறுக்கப்பட்டது. இந்நிலையில் தடையை மீறி குழித்துறை ரயில் நிலையத்துக்குள் நுழைந்த மீனவ குடும்பங்கள், ரயில் மறியலில் ஈடுபட்டுள்ளனர்.

Source : Tamil Hindu

http://tamil.thehindu.com/tamilnadu/article21288253.ece

Heavy traffic in marthandam kanyakumari district

marthandam-traffic

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில் போக்குவரத்து நெரிசல் காரணமாக தினம்தோறும் திருவனந்தபுரம் மருத்துவமனைகளுக்கு செல்லும் ஐம்பதுக்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ் கள் ஆமை வேகத்தில் சிரயான்குழி முதல் குழித்துறை வரை சுமார் மூன்று கிலோமீட்டர் செல்ல ஒரு மணிநேரத்திற்கும் மேல் ஆகின்றது.

 
 சதாரணமாக காலை எட்டு மணிமுதல் இரவு ஒன்பது மணி வரை தொடரும் இந்த அவலத்தில் தென் மாவட்டங்களான திருநெல்வேலி தூத்துக்குடி விருந்து நகர் உட்பட பல மாவட்டங்களை சேர்த்த விமானபயணிகளும் சிக்கி பல நேரங்களில் விமானங்களை தவற விடுவதும் பள்ளி கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்கள் விடியற்காலையிலே மார்த்தாண்டத்தை தாண்டி செல்ல வேண்டும் என்ற எண்ணத்தில் படிப்பில் கவனம் செலுத்தாமல் பயணத்தில் கவனம் செலுத்தும் கட்டாய சூழலுக்கு தள்ளபட்டுள்ளனர் இது போன்று அரசு அலுவலர்கள் தனியார் நிறுவனங்கள் மற்றும் கூலித்தொழிலாளிகள் இருமாநிலத்தை சேர்ந்த பலதரப்பினர் சுற்றுலா பயணிகள் சட்டமன்ற பாராளுமன்ற உறுப்பினர்கள் என அனைவரும் இங்கு சாதாரண நாட்களில் ஒரு மணிநேரமும் சீசன் நாட்களில் இரண்டு மூன்று மணிநேரம் வரை டிராபிக் ஜாம் பகுதியில் சிக்கி சூட்டையும் புகையையும் உணவாக்க வேண்டிய கட்டாய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். 
 
 இந்த மூன்று கிலோமீட்டர் பகுதிகளில் விபத்து நடக்காத நாட்களே இல்லை உயிர் பலி நடக்காத வாரமே இல்லை பாதசாரிகளுக்கு நடக்க பாதையே இல்லை ராஜவழிபாதை என்று அழைக்கப்பட்ட 120 அடி சாலை பம்மம் முதல் தட்டாகுடி இறக்கம் வரை தற்போது 20 அடி மட்டும் காணபடுகின்றது வர்தகர்கள் இந்த எல்லைக்குள் சுமார் இருநூற்று ஐம்பது க்கும் குறைவான அளவு இருப்பர் அவர்களுக்கு கடைகள் வாடகைக்குக் கொடுத்தவர்கள் நூற்றுக்கும் குறைவானவர்கள் இவர்களின் கடைகளின் ஆக்கிரமிப்பு பகுதியில் சில இடம் இடிக்கப்பட்டு விடும் என்பதற்காக சங்கம் என்ற பெயரில் வர்த்தகர்கள் பாதிக்கபடுவார்கள் என்ற புரளியை கிளப்பி பெரும் முதலாளிகள் குளிர்காய பார்கின்றனர். 
marthandam-traffic-kk
 
 நெல்லை திருவனந்தபுரம் சென்னை போன்ற பகுதிகளில் ஏறாளமான மேம்பாலங்கள் வந்ததால் எந்த வர்த்தகர்களுக்கும் வியாபாரம் பதிப்பு ஏற்படவில்லை மாறாக வியாபாரம் வளர்ச்சியே கண்டுள்ளது மாவட்ட வளர்ச்சிக்கு தடை நிற்கும் முதலாளித்துவ சக்தி களுக்கும் சந்தரப்பவாத அரசியல் கட்சிகளுக்கும்பாடம் புகட்டவும் நம் தலைமுறை போக்குவரத்து நெரிசல் இன்றி இலக்கை அடைய மேம்பாலம் தேவை சிந்தித்து செயல்பட அன்பு வேண்டுகோள்.

ஐ.அருள் குமார்
கன்னியாகுமரி மாவட்ட பாலிமர் தொலைக்காட்சி செய்தியாளர்

கன்னியாகுமரியில் ரூ.2,766 கோடியில் 4 வழிச்சாலை அமைக்கும் திட்டம்; மத்திய மந்திரி நிதின் கட்காரி அடிக்கல் நாட்டுகிறார்

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் 4 வழிச் சாலைகள் அமைக்கும் திட்டத்துக்கு அடிக்கல் நாட்டு விழா மார்த்தாண்டத்தில் நாளை நடைபெறுகிறது. இதில் மத்திய மந்திரி நிதின் கட்காரி, இணை மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கலந்துகொள்கின்றனர்.

மேம்பாலங்கள்

தமிழ்நாடு-கேரளா எல்லையில் காரோட்டில் இருந்து வில்லுக்குறி வரையில் 27.250 கிலோ மீட்டருக்கு தேசிய நெடுஞ்சாலையில், 4 வழிச்சாலை அமைக்கவும், வில்லுக்குறியில் இருந்து கன்னியாகுமரி வரையிலும், நாகர்கோவிலில் இருந்து காவல்கிணறு வரை, 42.703 கிலோ மீட்டர் தூரத்துக்கு 4 வழிச்சாலை அமைக்கவும், நாகர்கோவில் பார்வதிபுரம் மற்றும் மார்த்தாண்டம் சந்திப்புகளில் மேம்பாலம் கட்டவும் மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் திட்டமிட்டது.

அதேபோல திருப்பூர் முதல் அவினாசிபாளையம் வரை தேசிய நெடுஞ்சாலையில் 31.800 கிலோ மீட்டருக்கு 4 வழிச்சாலை அமைக்கவும் திட்டமிடப்பட்டது.

இதன்படி, காரோடு முதல் வில்லுக்குறி வரை 4 வழிச்சாலை அமைக்க ரூ.1,274.34 கோடியும், வில்லுக்குறி முதல் கன்னியாகுமரி வரையிலும், நாகர்கோவிலில் இருந்து காவல்கிணறு வரையிலும் 4 வழிச்சாலை அமைக்க ரூ.1,041.98 கோடியும், நாகர்கோவில் பார்வதிபுரம் மற்றும் மார்த்தாண்டம் சந்திப்புகளில் மேம்பாலங்கள் கட்டுவதற்கு ரூ.286.95 கோடியும், திருப்பூர் முதல் அவினாசிபாளையம் வரை 4 வழிச்சாலை அமைக்க ரூ.162.72 கோடியும் ஒதுக்கி மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் திட்டம் வகுத்தது.

அடிக்கல் நாட்டு விழா

இந்த திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டு விழா நாளை (செவ்வாய்கிழமை) கன்னியாகுமரி மாவட்டம், மார்த்தாண்டம் பஸ் நிலையம் அருகில் நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் மத்திய சாலை போக்குவரத்து, நெடுஞ்சாலை மற்றும் கப்பல் துறை மந்திரி நிதின் கட்காரி கலந்து கொண்டு அடிக்கல் நடுகிறார்.

இந்த நிகழ்ச்சிக்கு மத்திய சாலை போக்குவரத்து, நெடுஞ்சாலை மற்றும் கப்பல் துறை இணை மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் முன்னிலை வகிக்கிறார். இதேபோல தமிழக நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எடப்பாடி கே.பழனிச்சாமி உள்பட தமிழகத்தைச் சேர்ந்த பல எம்.பி.க்கள் கலந்துகொள்கின்றனர்.

Source : Dinathanthi

Pon Radhakrishnan – இந்து மாணவர்கள் கல்வி உதவித்தொகைக்காக மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது

Pon Radhakrishnan Review Bridgeஇந்து மாணவர்கள்  கல்வி உதவித்தொகைக்காக மத்திய அரசு நடவடிக்கை எடுத்து  வருவதாக மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.

ஆய்வு

மார்த்தாண்டத்தை (Marthandam)  அடுத்த பயணம் – திக்குறிச்சி ஆற்று இணைப்புபாலம் ரூ. 5½ கோடி செலவில் புதிதாக அமைக்கப் படுகிறது.  இதன் இறுதிகட்ட பணி நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் பாலம் பணியை ஆய்வு செய்தார்.

அந்த இணைப்பு பாலத்தின் அருகில்,  2–வது சிவாலயமான திக்குறிச்சி மகாதேவர் கோவில் உள்ளது.  பாலம் கட்டும் பணி நடந்த போது ஆற்று தண்ணீர், கோவிலின் உள்ளே புகாமல் இருப்பதற்கு வைக்கப் பட்டிருந்த தடுப்பு கற்கள் அகற்றப்பட்டது.  இதனால், ஆற்று வெள்ளம் சிவாலய சுவற்றில் மோதி, சுவர் சேதமடைந்துள்ளது.

இந்தநிலையில், பாலம் பணியை பார்வையிட வந்த மத்திய மந்திரியிடம்,  கோவிலை பாதுகாக்கும் வகையில்  தடுப்புசுவர் கட்டவும்,   சிவாலய  ஓட்டம் நடைபெறும் போது புனிதநீராடுவதற்கு வசதியாக படித்துறை அமைக்க வேண்டும் எனவும் பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர்.   இதற்கு மத்திய மந்திரி பொன். ராதா கிருஷ்ணன் நடவடிக்கை மேற்கொள்ளப் படும் என தெரிவித்தார்.

கல்வி உதவித்தொகை

காங்கிரஸ் கட்சி, இந்து மாணவர்கள் கல்வி உதவித் தொகைக்காக ஜூலை போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்துள்ளது. இதை நான் வரவேற்கிறேன். காங்கிரசார்,  தங்களின் கட்சியை சேர்ந்த சட்டமன்ற மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் எடுத்து கூறி சட்டமன்றம் மற்றும் பாராளுமன்றத்தில் இது குறித்து பேசுவதற்கு வலியுறுத்த வேண்டும். இந்து மாணவர்கள்  கல்வி உதவித் தொகைக்காக மத்திய பா.ஜனதா அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.  இவ்வாறு அவர் தெரிவித் தார்.

Pon Radhakrishnan

Source : Dinathanthi