ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்று நடுக்கடலில் மாயமாகியுள்ள மீனவர்களை விரைந்து மீட்கக்கோரி கன்னியாகுமரியில் 10,000-க்கும் மேற்பட்டோர் ரயில் மறியலில் ஈடுபட்டுள்ளனர். மீட்புப்பணிகளில் அரசு மெத்தனமாக இருப்பதாக அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
‘ஒக்கி’ புயலால் கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் கடும் சேதத்தை ஏற்படுத்தியது. புயலின்போது ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்று நடுக்கடலில் மாயமாகியுள்ள மீனவர்கள் மற்றும் படகுகளை மீட்கும் பணியில் இந்தியக் கடலோர காவல்படை கப்பல்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.