Tag Archives: health

ரத்த அழுத்தத்தை குறைக்கும் பீட்ரூட்

Reduced blood pressure

kanyakumari-healthபல்வேறு மருத்துவ குணங்கள் நிரம்பிய பீட்ரூட் 2 ஆயிரம் வருடங்களாக உணவில் பயன்படுத்தப்படுகிறது. மாவுச்சத்து அதிகம் உள்ளது. கண்ணுக்கும், உடலுக்கும் குளிர்ச்சி தரும். ரத்தத்தின் கழிவுகளை அகற்றி சுத்தம் செய்கிறது. வயிற்று பிரச்னைகள் தீரும். புற்றுநோய்க்கு மருந்தாக பயன்படுகிறது. சருமத்தில் தாங்க முடியாத அளவில் அரிப்பு ஏற்பட்டால், அப்போது அதனை சரிசெய்ய பீட்ரூட் சாற்றுடன், படிகாரத்தை பொடியாக்கி, அரிப்புள்ள இடத்தில் தடவினால், உடனே அரிப்பு அடங்கிவிடும்.

ரத்த சோகை, உடல் எடை சரியாகும். முகப்பொலிவு கூடும் சிறுநீரக எரிச்சலை குறைக்கிறது. தீப்பட்ட இடத்தில் சாற்றைத் தடவினால் தீப்புண் கொப்பளமாகாமல் விரைவில் ஆறும் பீட்ரூட் கூட்டு மலச்சிக்கலை நீக்கும். பீட்ரூட் அஜீரணத்தை நீக்கி செரிமானத்தைக் கூட்டும். பீட்ரூட்டை நறுக்கி பச்சையாக எலுமிச்சை சாற்றில் தோய்த்து உண்டு வந்தால் ரத்தத்தில் சிவப்பணுக்கள் உற்பத்தியாகும்.

பீட்ரூட் சாற்றை, வெள்ளரிக்காய் சாற்றுடன் கலந்து சாப்பிட்டால், சிறுநீரகம் மற்றும் பித்தப்பையில் தங்கியிருக்கும் அழுக்குகள் வெளியேறி, சுத்தமாக இருக்கும். மூல நோய் இருப்பவர்கள், பீட்ரூட்டை கசாயம் போட்டு குடித்தால், குணமாகிவிடும்.  தினமும் பீட்ரூட் ஜூஸ் குடித்து வந்தால், அதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட், புற்றுநோயை ஏற்படுத்தும் செல்களை அழித்துவிடும். இதனால் புற்றுநோயை தடுக்கலாம்.

பீட்ரூட்டைக் கசாயமாக்கி உடலில் அரிப்பு ஏற்பட்ட இடங்களில் கழுவி வர அரிப்பு மாறும். பீட்ரூட்டில் 87.7 சதவீதம் நீச்சத்தும், 1.7 புரதச்சத்தும், 0.1 சதவீதம் கொழுப்புச் சத்தும் அடங்கியுள்ளன. சுண்ணாம்பு, மக்னீசியம், இரும்பு, சோடியம், பொட்டாசியம், தாமிரம், கந்தகம், குளோரின் போன்ற உலோக சத்துக்களும், வைட்டமின் சி உள்ளன. வைட்டமின் ஏ அதிகமாக உள்ளது. பீட்ரூட்டில் இருக்கும் நைட்ரேட்டுகள் உடலுக்குள் சென்றதும், நைட்ரிக் ஆக்ஸைடாக மாற்றப்பட்டு, ரத்த குழாய்களை விரித்து ரிலாக்ஸ் செய்கிறது. இதனால் ரத்த ஓட்டம் சீராகி, ரத்த அழுத்தம் குறைகிறது.

Angamardhana – The Route to Healthy body

‘ஜிம்முக்குப் போறேன்’ என்று பலரும், equipments (உடற்பயிற்சி கருவிகள்) வாங்கி வீட்டிலேயே ப்ராக்டிஸ் பண்றேன்னு சிலரும், மூச்சு இறைக்க, நரம்பு புடைக்க உடற்பயிற்சி செய்வதைப் பார்க்கிறோம். ஆனால், அன்றைய யோகிகள் இது எதுவும் இல்லாமல் எப்படி தங்கள் உடலைக் கட்டுமஸ்தாக வைத்திருந்தார்கள்?! இதோ விடை சொல்ல வருகிறது ‘அங்கமர்தனா’. தொடர்ந்து படியுங்கள்!


சத்குரு:

Yoga‘அங்கமர்தனா’ என்பது ஒரு தனித்தன்மை வாய்ந்த யோக வழிமுறை. ஆனால் இப்போது அது முற்றிலுமாக மறைந்துவிட்டது. அந்த அற்புத செயல்முறையை இப்போது ஈஷாவில் மீண்டும் கற்றுக் கொடுத்து புத்துயிரூட்டி வருகிறோம். அங்கமர்தனாவில், உங்கள் உடல் எடையையும் விசையையும் பயன்படுத்தி, சில நாட்களுக்குள் உங்கள் தசைகளின் வளைந்து கொடுக்கும் தன்மையை அதிகப்படுத்துகிறீர்கள். இது வெறும் 25 நிமிட செய்முறைதான்.

“அங்கமர்தனா” என்றால் உங்கள் உடல் அங்கங்களின் மேல் ஒரு ஆளுமை கொண்டு வருவது என்று பொருள். இந்த உலகில் நீங்கள் எந்தவொரு செயலைச் செய்தாலும், அது நீங்கள் உங்கள் உடல் அங்கங்களின் மேல் எப்படி ஆதிக்கம் செலுத்துகிறீர்கள் என்பதைப் பொருத்துதான் அந்த செயலின் வெற்றி தீர்மானிக்கப்படும். உங்களின் விடுதலைக்கும், உங்களைச் சுற்றியுள்ளவர்களின் விடுதலைக்கும் ஏதாவது செய்ய வேண்டும் என்று நீங்கள் நினைத்தால், உங்களின் அங்கங்களின் மேல் ஒரு ஆளுமை இருந்தால்தான் அதைச் செய்ய முடியும். உங்கள் அங்கங்களின் மேல் ஆளுமை என்றால், நீங்கள் ஏதோ தசை வலிமை உள்ளவராகவோ அல்லது மலை மேல் ஏறுபவராகவோ இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. அதுவும் நடக்கலாம், ஆனால் அடிப்படையில், உங்கள் சக்தியின் கட்டமைப்பை உறுதிப்படுத்துவதுதான் இதன் நோக்கமே.

ஒரு உடற்பயிற்சி என்ற நிலையிலிருந்து பார்த்தாலும், அங்கமர்தனா ஒரு வெற்றிகரமான பயிற்சிதான். ஆனால், தசைகளை வலுவூட்டுவதும், உடலின் கொழுப்புச்சத்தை குறைப்பதும் இதன் பக்க பலன்கள் மட்டுமே. மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், நீங்கள் எந்த ஒரு சாதனா செய்தாலும், அது அங்கமர்தனாவோ அல்லது வேறு எதோவொரு சாதனாவாக இருந்தாலும் சரி, நாம் நம் சக்தி நிலையில் ஒரு குறிப்பிட்ட ஒருங்கிணைப்பை ஏற்படுத்த முயற்சிக்கிறோம் என்பதே உண்மை.

மேலும் படிக்க…

http://tamilblog.ishafoundation.org/udalai-thangamaakkum-angamardhana/