Category Archives: Health

what can be eaten as a substitute for rice and wheat?

கேழ்வரகு… ஒர் பார்வை….கண்டிப்பாக முழுவதுமாக படியுங்கள்..

Sprouted Finger Millet

அரிசி, கோதுமைக்கு மாற்றாக எதைச் சாப்பிடலாம் என்ற தேடலில், சர்வதேச அளவில் இன்றைக்கு கேழ்வரகுதான். அப்படி என்ன கேழ்வரகுக்குச் சிறப்பு?

ஆரியம், கேழ்வரகு, கேவுரு, ராகி, கேப்பை… இப்படிப் பல பெயர்களால் அழைக்கப்படும் கேழ்வரகு, அடிப்படையில் அரிசியைப் போல் கார்போஹைட்ரேட் நிறைந்த ஓர் உணவு தானிய மாகும்.

இட்லி, தோசை, இடியாப்பம் என நெல் அரிசியில் செய்யும் அத்தனை பண்டங் களையும் இதிலும் செய்ய முடியும். ஆனால், நெல் விளைவிக்கத் தேவையான தண்ணீரோ, உரமோ, பூச்சிக்கொல்லியோ கேழ்வரகுக்குத் தேவை இல்லை. இதில் விவசாயிகளுக்கு நன்மை இருக்கிறது,

சரி சாப்பிடும் நமக்கு என்ன நன்மை இருக்கிறது? இருக்கிறது…

உரமும் பூச்சிக்கொல்லியும் இல்லாததால், உருக்குலைக் காத உணவுச் செறிவை கேழ்வரகு பெற்று இருப்பதுதான் இதன் முதல் விசேஷம். கேழ்வரகுக்கு உரம் போட்டால்தான் ஆபத்து. வேகமாக செடி உயர வளர்ந்து, கதிர் மட்டும் சிறுத்து, விதை குறைந்துபோகும். அதனாலேயே உர நிறுவனங்களின் பாச்சா, கேழ்வரகில் அதிகம் பலிக்கவில்லை என்பதால், எந்தக் கடையில் வாங்கினாலும் கிட்டத்தட்ட இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட தானியமாக நாம் கேழ்வரகை நம்பி வாங்கலாம்.

”கேழ்வரகு பிறந்த இடம் தமிழகம் அல்ல என்றாலும், தமிழ்ச் சமூகத்தோடும் தமிழக நிலவியலோடும் நெருக்கமான தொடர்பு உடை யது கேழ்வரகு.

இங்கு பல நூற்றாண்டு காலப் பின்னணி கேழ்வரகுக்கு இருக்கிறது. நாட்டுக் கேழ்வரகிலேயே வெண்ணிறக் கேழ்வரகு, கறுப்புக் கேழ்வரகு, நாகமலைக் கேழ்வரகு, மூன்று மாதக் கேழ்வரகு, தேன்கனிக் கோட்டைக் கேழ்வரகு என்று ஏறத்தாழ 60 வகைகள் இருக்கின்றன.

ஓசூர், தேன்கனிக்கோட்டை, தளி பகுதிகளில் கேழ்வரகுத் திருவிழா எனும் ஒரு விழாவே கேழ்வரகு அறுவடைத் திருவிழாவாக, நம் பொங்கல்போல் இன்றளவும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது”.

அரிசி, கோதுமை உள்ளிட்ட பல தானியங் களைவிட கேழ்வரகில் கால்சியமும் இரும்புச் சத்தும் அதிகம். பாலைக் காட்டிலும் மூன்று மடங்கு கால்சியமும், அரிசியைவிட 10 மடங்கு கால்சியமும் கேழ் வரகில் உண்டு.

ஆனால், பாலும் அரிசியும் உடம்பு வளர்க்கும். கேழ்வரகோ உடல் வற்ற உதவும். இதனாலேயே எல்லோருக்கும் நல்ல தானியம் கேழ்வரகு என்றாலும், வளரும் குழந் தைகளுக்கும், மாதவிடாய்க் கால மகளிருக்கும், பாலூட்டும் அன்னையருக்கும் மிகமிக அவசிய மான உணவு கேழ்வரகு.

குழந்தை ஒரு வயதைத் தொடும்போது கேழ் வரகை ஊறவைத்து முளைகட்டி, பின் உலர்த்திப் பொடி செய்து, அதில் கஞ்சி காய்ச்சிக் கொடுத் தால், சரியான எடையில் குழந்தை போஷாக்காக வளரும்.

ஆந்திர மாநிலத்தில் வறுமையில் பீடித்திருந்த கிராமங்களில் இந்திய முன்னேற்றத்துக்கான கூட்டமைப்பினர் (AID) ஒரு வயதில் இருந்து எட்டு வயது வரை உள்ள – மெலிந்துபோன நலிந்த ஊட்டச் சத்து இல் லாத குழந்தைகளுக்கு – இந்த முளை கட்டிய கேழ்வரகை தினசரி உணவாகக் கொடுத்து வந்தனர். ஓர் ஆண்டு முடிவில் 51 சதவிகிதக் குழந்தைகள் உடல் எடையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது.

”மிகக் குறைந்த விலையில் சத்தான, சுவையான ஊட்டச் சத்தை வழங்க கேழ்வரகுக் கஞ்சிக்கு இணை ஏதும் கிடையாது” என்றார்கள் அந்த அமைப்பினர்.

சமீபத்திய ஆய்வுகளில் மூட்டு வலி முதல் ஆண்மைக் குறைவு வரை பல நோய்களுக்குக் கேழ்வரகு உணவு நல்ல பலன் அளிப்பதாகத் தெரியவந்திருக்கிறது. முக்கியமாக, வயோதிக நோய்களுக்கு. இனிமேலும் கேழ்வரகைத் தவிர்ப்பீர்களா என்ன?

இந்த கேழ்வரகு என்ற ராகியில் உள்ள சத்துக்கள்

புஷ்டி-7.1%, கொழுப்பு-1.29%, உலோகம்-2.24%, கால்ஷியம்-0.334%, பாஸ்பரஸ்-0.272%, அயன்-5.38%, விட்டமின் ஏ-70.

அரிசியில் உள்ள சத்துக்கள்

புஷ்டி-6.85%, கொழுப்பு-0.55%, உலோகம்-0.05%, கால்ஷியம்-0.007%, பாஸ்பரஸ்-0.108%, அயன்-1.02%, விட்டமின் ஏ-0.

ஆரோக்கியமான உணவுகளில் இன்றியமையாதது ராகி. சிறு தானிய வகையைச் சேர்ந்த இதனை கேப்பை மற்றும் கேழ்வரகு என்றும் அழைக்கப்படுகிறது.

மலைப்பகுதிகளில் தானாக வளரக்கூடிய சிறு தானியங்களில் அற்புதமான சத்துக்கள் மறைந்துள்ளன.

PaniVaraguArisi

சோளம், கம்பு, கேழ்வரகு, திணை, சாமை, குதிரைவாலி, வரகு, பனிவரகு போன்ற சிறு தானியங்கள் அதிக நார்ச்சத்து கொண்டவையாகவும் எளிதில் செரிமானம் அடையக்கூடியதுமாகும்.

இவ்வகை சிறுதானியங்களில் குறைந்தளவே குளுகோஸ் இருப்பதால் இவை மனிதனை சர்க்கரை நோயிலிருந்து காப்பாற்றக் கூடியவை. இவை சத்து மிக உறுதியான உடலமைப்பை தந்து, உழைக்கும் மக்களின் உறுதியை பலப்படுத்தும் உணவாகத் திகழ்கிறது.

இச்சிறுதானியங்கள் அதிகளவு தாதுப் பொருட்களான இரும்பு, மெக்னிசியம், பாஸ்பரஸ் மற்றும் பொட்டாசியம் ஆகியவற்றைக் கொண்டுள்ளன.

இத்தானியங்களில் பி வைட்டமின் மற்றும் நைசின் போலிக் ஆசிட் உள்ளிட்ட அமினோ அமிலங்களும் உள்ளன. மேலும், இவை அதிகளவில் உட்கொள்ளும் போது விரைவில் செரிமானமடைவதுடன் மற்ற சத்துக்களையும் உடம்புக்குத் தேவையான அளவில் மாற்றித்தரக்கூடிய சக்தியையும் கொண்டுள்ளன.

இதில் உள்ள நார்ச்சத்து இரைப்பை புழுவைத் தடுத்து மலச்சிக்கலை தவிர்க்கும் தன்மை கொண்டவை.

ஆரோக்கியமான உணவுகளில் இன்றியமையாதது ராகி. சிறு தானிய வகையைச் சேர்ந்த இது கேப்பை மற்றும் கேழ்வரகு என்றும் அழைக்கப்படுகிறது. இதை ஆங்கிலத்தில் பிங்கர் மில்லட் என்றும், தமிழில் கிராமங்களில் இப்பயிர் இன்றைக்கும் கேப்பை என்றே அழைக்கப்படுகிறது.

இப்பயிர் சுமார் நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இந்தியாவில் புழக்கத்தில் உள்ளது.

இந்தியாவில் விளையும் சிறுதானியத்தில் 25 சதவீதம் கேழ்வரகு ஆகும். அரிசி மற்றும் கோதுமையை விட அதிகளவு ஊட்டசத்து நிறைந்தது. இதயநோயுள்ளவர்கள், சர்க்கரை நோயாளிகள், குழந்தைகளுக்கு இது அற்புதமான உணவு.

உடலுக்கு வலிமை தரும்
கேழ்வரகில் புரதம், கொழுப்பு, இரும்புச்சத்து, நார்ச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், தயமின், கார்போஹைட்ரேட் உள்ளன. இதுதவிர பி கரேட்டின், நயசின், ரிபோப்ளேவின் போன்ற சிறிய ஊட்டச்சத்துக்களும், அமினோ அமிலங்களும் நிறைந்துள்ளன.

எனவே, தான் ராகியை பழங்காலந்தொட்டு முளைக்கட்டி சிறுகுழந்தைகளுக்கு வழங்கும் வழக்கம் நமது நாட்டில் கிராமங்களில் நடைமுறையில் உள்ளது. இதுபோன்று ஊட்டச்சத்து மிக்க தானியங்களை உட்கொண்டதாலேயே நமது முன்னோர்கள் உடலுழைப்பாளிகளாகவும் திடகாத்திரமானவர்களாகவும், திகழ்ந்து வந்துள்ளனர்.

கேப்பையை கூழாக சாப்பிடுவதை விட ரொட்டி போல செய்து சாப்பிடலாம். ஏனெனில் கூழாக உண்ணும் போது சீக்கிரம் ஜீரணம் ஆயிடும். மீண்டும் பசி எடுக்கும் எனவே ரொட்டி ஜீரணம் ஆக நேரம் எடுத்துக்கொள்ளும். அதனால் பசி குறைவாக எடுக்கும்.

உஷ்ணத்தை குறைக்கும்

ராகி களி உடல் உஷ்ணத்தைக் குறைத்து குடலுக்கு வலிமை தரும். இன்றைக்கும் கர்நாடகம் மற்றும் தமிழ்நாட்டின் கிராமங்களில் களி செய்து உண்கின்றனர். ஆடி மாதத்தில் அம்மன் கோவில்களில் கேப்பை கூழ் ஊற்றுவது வாடிக்கையாக உள்ளது.

இதயநோயுள்ளவர்கள், சர்க்கரை நோயாளிகள், குழந்தைகளுக்கு இது அற்புதமான உணவு. இது ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்துவதால் நீரிழிவு நோயாளிகளுக்கு சிறந்த மருந்து. ராகி மால்ட் செய்தும் சாப்பிடலாம்

கேழ்வரகின் மருத்துவ பயன்கள்

கேழ்வரகில் கால்சியம்,இரும்பு சத்து அதிகம் உள்ளன .பாலில் உள்ள கால்சியத்தை விட இதில் அதிகம் உள்ளன இதில் ஆக்ஸாலிக் அமிலம் அதிகம் உள்ளதால் ,சிறுநீரக கற்கள் உள்ளவர்கள் இதை தவிர்ப்பது நல்லது .
.
கேழ்வரகை தினமும் உணவில் சேர்த்தால் உடல் வலுபெறும் .நோய் எதிர்ப்பு சத்தியை அதிகரிக்கிறது .உடல் சூட்டை தனிக்கும் .

குழந்தைகளுக்கு கேழ்வரகுடன் பால் ,சர்க்கரை சேர்த்து கூழாக காய்ச்சி கொடுக்கலாம் . இது குழந்தை வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகிறது .
தினம் கேழ்வரகு கூழ் சாப்பிட்டு வர குடற்புண் குணமடையும் .

மாதவிடாய் கோளாறு கொண்ட பெண்கள் இதை சாப்பிட்டு வர குணமடையும் .கேழ்வரகு சாப்பிட்டால் உடல் எடை குறையும் .
கேழ்வரகில் உள்ள நார் சத்துக்கள் மலசிக்கலை தடுக்கிறது .

இது ஜீரணமாகும் நேரம் எடுத்து கொள்வதால் , கேழ்வரகு சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்த உணவாகும் .சர்க்கரை நோயாளிகள் கேழ்வரகை ,அடை ,புட்டாக , செய்து சாப்பிடலாம் . கூழ் அல்லது கஞ்சியாக சாப்பிடக்கூடாது .கூழாக குடிக்கும் போது சிக்கிரம் ஜீரணம் அடைந்து விடும்.

கொலஸ்டிராலை குறைக்கும் .இதில் இரும்பு சத்து அதிகம் உள்ளது இது இரத்த சோகை நோய் வரமால் தடுக்கிறது .இதில் அதிக அளவு கால்சியம் ,இரும்பு சத்து அதிகம் உள்ளன கர்ப்பிணி பெண்கள் தினம் உணவில் சேரத்து கொள்ளலாம் .

பசியின் பொது சுரக்கும் அமிலத்தை சற்றுக் குறைத்து உடல் எடையை நிலையாக வைத்து இருக்க உதவும்.சர்க்கரை நோய் உள்ளவர்கள் இதைக் காலை சிற்றுண்டியாக பருகுகின்றனர்.

கேழ்வரகு கூழை தொடர்ந்து காலையில் உட்கொள்ளுவதால் சர்க்கரை நோயாளிகளுக்கு அவர்களுடைய சர்க்கரை அளவு சற்று குறைந்து விடும் .

நிலங்களிலும் ,வயல்களிலும் வேலை செய்யும் பல கூலித் தொழிலாளிகள் விரும்பி உண்ணும் உணவாக இது கருதப்படுகிறது .உடலில் இருக்கும் தேவை அற்ற கெட்ட கொழுப்பை அகற்ற மட்டுமின்றி குடலுக்கு வலு சேர்ப்பதாக உள்ளது.

கூழில் நார் சத்து அதிகமாக உள்ளது குருதியில் இருக்கும் கொழுப்பையும் குறைக்க வல்லது .கேழ்வரகில் புரதம், கொழுப்பு, இரும்புச்சத்து, நார்ச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், தயமின், கார்போஹைட்ரேட் உள்ளன.

இதுதவிர பி கரேட்டின், நயசின், ரிபோப்ளேவின் போன்ற சிறிய ஊட்டச்சத்துக்களும், அமினோ அமிலங்களும் நிறைந்துள்ளன.எனவே, தான் ராகியை பழங்காலந்தொட்டு முளைக்கட்டி சிறுகுழந்தைகளுக்கு வழங்கும் வழக்கம் நமது நாட்டில் கிராமங்களில் நடைமுறையில் உள்ளது.

இதுபோன்று ஊட்டச்சத்து மிக்க தானியங்களை உட்கொண்டதாலேயே நமது முன்னோர்கள் உடலுழைப்பாளிகளாகவும் திடகாத்திரமானவர்களாகவும், திகழ்ந்து வந்துள்ளனர்.இயற்கையாய் இயற்கையோடு வாழ..!

இயற்கை மருத்துவத்துக்கு மாறுவோம்..
ரத்த சோகையை குணப்படுத்தும் கேழ்வரகு.

கோதுமைக்கு இணையான சத்துக்கள் கொண்ட ராகியில் இரும்பு, கால்சியம், வைட்டமின் சத்துக்கள் நிறைந்துள்ளன. வளரும் குழந்தைகள், பூப்பெய்த பெண்கள் மற்றும் வயதான பெண்கள் கேழ்வரகினை அடிக்கடி எடுத்துக்கொள்வது நல்லது.

பசியை அடக்கி, சோர்வை நீக்கி உடலுக்கு வலு சேர்ப்பதால் பிறந்து சில மாதங்கள் ஆன குழந்தைகளுக்கும் கேழ்வரகை கூழாக்கி வழங்கி வருகின்றனர்.

கேழ்வரகை ஊறவைத்து, அரைத்து, வடிகட்டி குழந்தைகளுக்கு கொடுப்பதன் மூலம் தாய்பாலுக்கு இணையான சத்துக்களை கொடுக்கிறது.

வயலுக்கு சென்று வந்த நம் முன்னோர்களும் கேழ்வரகு கூழ் குடித்து காலை முதல் மாலை வரை உற்சாகமாக பணி செய்து வந்ததும் உண்டு.

இந்த தானியத்தை பயன்படுத்தி பெண்களுக்கு ஏற்படும் வெள்ளை படுதல் நோய்க்கான தேநீர் செய்வது குறித்து பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:
கேழ்வரகு கதிர், பனங்கற்கண்டு.

கேழ்வரகு கதிரில் உள்ள இலை தண்டு, வேர் உள்ளிட்ட அனைத்து பகுதிகளையும் சுத்தம் செய்து வைத்துக்கொள்ளவும். பாத்திரத்தில் நீர் விட்டு, கேழ்வரகு கதிர், பனங்கற்கண்டு சேர்த்து நன்கு கொதிக்க விடவும். இந்த தேநீரை தினமும் எடுத்து வந்தால் பெண்களின் மாதவிடாய் காலங்களுக்கு இடையே ஏற்படும் ரத்த கசிவு நீங்கும். வெள்ளைப்படுதல் நோயினால் உடல் உருக்கப்படுவது தவிர்க்கப்படும்.

குழந்தைகளுக்கு பலம் தரும் கேழ்வரகு பால் கஞ்சி:

தேவையான பொருட்கள்:
கேழ்வரகு (முளைக்கட்டியது), நாட்டு சர்க்கரை, ஏலக்காய் பொடி, காய்ச்சிய பால்.

முளைகட்டிய கேழ்வரகை அரைத்து பால் எடுக்கவும். அதனை வானலியில் ஊற்றி, நாட்டு சர்க்கரை, ஏலக்காய் பொடி சேர்த்து கொதிக்க விடவும். நன்கு வெந்து கூழ் போல் வந்ததும், அதனுடன் காய்ச்சிய பால் சேர்த்து குழந்தைகளுக்கு சாப்பிட கொடுக்கலாம்.

அரிசியை விட அதிக சத்துக்களை கொண்டுள்ள கேழ்வரகை குழந்தைகளுக்கு கொடுப்பதால் நீண்ட நேரம் பசி அடங்கும்.
கெட்ட கொழுப்புகளை வெளித்தள்ளி, நல்ல கொழுப்புகளை உடலில் சேர்க்கிறது.

உடலுக்கு பலம் தரும் கேழ்வரகு உருண்டை:

தேவையான பொருட்கள்:
கேழ்வரகு மாவு, நாட்டு சர்க்கரை, வெள்ளரி விதை, நெய், உப்பு, வறுத்த வேர்க்கடலை, ஏலக்காய்.

கேழ்வரகு மாவுடன் உப்பு சேர்த்து அடை போல் தட்டி வெயிலில் காயவைத்து தயார் செய்து கொள்ளவும். இந்த அடையை நீர் விடாமல் பொடித்து கொள்ளவும். அதனுடன் வறுத்த வேர்க்கடலை, ஏலக்காய் சேர்த்து பொடிக்கவும். இந்த கலவையுடன் சர்க்கரை, நெய் சேர்த்து உருண்டையாக செய்து கொள்ளவும். இந்த உருண்டையை பூப்பெய்திய பெண்களுக்கு செய்து கொடுத்து வருவதால் உடல் பலம் பெறும்.

இரும்பு சத்து நிறைந்த கேழ்வரகு ரத்த சோகை மட்டுமல்லாது பற்கள், தலைமுடி ஆகியவற்றுக்கும் சிறந்த மருந்தாக இருக்கிறது

Health Benefits of Turmeric

[quote]Every morning a pinch of Turmeric with honey can keep you away from doctors.[/quote]

turmeric-powder

Usually most of all us use Turmeric for cooking…
Let us now see the golden benefits of Turmeric Powder:

Prevent Cancer:

Eating Turmeric powder everyday kill the Cancer cells, Also it stops Tumour cells growth.

Kill Germs:

Even a wounds can be cured by applying Turmeric powder on it. Usually Turmeric has an effect of killing bacteria, Virus and fungi. Turmeric Powder will maintain and strengthen the Immune system by killing the bacteria and viruses.

Control Diabetes:

Keeping Insulin at normal level..Pinch of Turmeric Powder will keep away from diabetes.

Control Cholesterol level:

Regular intake of turmeric powder will reduce the cholesterol level and body weight will be maintained by breaking down the fat.

கன்னியாகுமரி : “நதிகளை மீட்போம்… பாரதம் காப்போம்” பேரணிக்காக சத்குருவின் 30 நாள் பயணம்

“நதிகளை மீட்போம்… பாரதம் காப்போம்” பேரணிக்காக சத்குருவின் 30 நாள் பயணம் – நாள் 2 – கன்னியாகுமரி

kanyakumari-rallyforrivers

சத்குரு அவர்கள் பேசிய போது, “நாம் கண்களை மூடிக் கொண்டுவிட்டால், பிரச்சினை போய்விடாது. நம் உயிர் வேண்டுமானால் போகலாம், ஆனால் பிரச்சினை அவ்வாறே இருக்கும். அதை அடுத்த தலைமுறையினரின் தலையில் நாம் இறக்கிவிடுவோம். இது மிகவும் பொறுப்பற்ற செயல். பாகிஸ்தானுடன் போர் நடந்தபோதுகூட இத்தனை பேர் இறந்திருக்க மாட்டார்கள். ஆனால் கடந்த 10 ஆண்டுகளில் 3,00,000 விவசாயிகள் – நாம் உண்ண நமக்கு உணவளித்த விவசாயிகள் – தனக்கும், தன் குடும்பத்தினருக்கும் உண்ண உணவின்றி, தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள்.

இது நமக்கு பெரிய தலைக்குனிவு. இலையும், ஆடு/மாடு சாணமும்தான் மக்கி மண்ணாகிறது. என்றோ மரமில்லாமல் செய்துவிட்டோம். இப்போது விலங்கினங்களையும் வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்து கொண்டிருக்கிறோம். காடில்லாமல் மழையில்லை. மழையில்லாமல் தண்ணி இல்லை. இப்படி மண்ணையும் தண்ணியையும் தொலைத்துவிட்டு குழந்தைகளுக்கு எதை விட்டுச் செல்வது? இன்றே இதற்கான செயலில் இறங்கினால்தான் 15-20 வருடத்தில் பலன் கிடைக்கும்” என்றார்.

Food is a Medicine, Dr. G. Sivaraman

Americans are bombarded with information about “healthy eating,” but we suffer from higher rates of obesity and chronic disease than ever before. We are told one year to avoid fat and the next to avoid carbohydrates. It is enough to make anyone distrust nutritional advice altogether, particularly anything that claims that “food is medicine.”

Perhaps more than anything else in our lives, the foods we regularly eat help determine whether or not we will become ill, or remain healthy into older age. Whether vegetables, fruit, meat, oils or grains, foods contain influential substances including antioxidants, phytonutrients, vitamins, minerals, fatty acids, fiber and much more.

புற்றுநோயை அழிக்கும் 30 உணவுகள்!

உணவுதான் அமுதமும் விஷமும் ஆகிறது.நாம் உண்ணும் உணவே நம் பெரும்பாலானநோய்களுக்குக் காரணம். உணவுப் பழக்கத்தை மாற்றிக்கொள்வதன் மூலம்ஆரோக்கியத்தை நம் வசமாக்காலாம்.

veg

உலகையே அச்சுறுத்திக்கொண்டிருக்கும் நோய்களில் பிரதானமானது புற்றுநோய்.நம்முடைய உடலில் தினசரி புற்றுநோய் செல்கள் உருவாகின்றன. அவற்றை, நம்முடைய நோய் எதிர்ப்பு சக்தி அழிக்கிறது. ‘சில உணவுகளுக்குப் புற்றுநோயைத்தடுக்கும் ஆற்றல் உண்டு’ என்கின்றன ஆய்வுகள். புற்றுநோயைத் தடுக்கும் 30 உணவுகள்என்னென்ன என்று பார்ப்போம்.

மஞ்சள்: புற்றுநோய் செல்களை அழிப்பதில் மஞ்சள், முதன்மையானது. இதில் உள்ளபாலிஃபீனால், புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தாமதப்படுத்துகிறது. குர்க்குமின்என்ற பொருள் புற்றுநோயை எதிர்க்கும் ஆற்றல் கொண்டது. புற்றுநோய் உருவாகக்காரணமான புண்களை ஆற்றும் சக்தி மஞ்சளுக்கு உண்டு.

பூண்டு: பூண்டில் உள்ள கந்தகம் (Sulfur)  உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. இதில் உள்ள பைட்டோகெமிக்கல் புற்றுநோயைத் தடுக்கும் ஆற்றல்கொண்டவை. மேலும், புற்றுநோயால் வயிற்றில் ஏற்படும் கட்டிகளைக் குறைக்க பூண்டு உதவுகிறது.

இஞ்சி: பசியைத் தூண்டும்; உமிழ்நீரைப் பெருக்கும். உடலுக்கு வெப்பத்தை அளித்து, குடலில் உள்ள வாயுவை நீக்கும். இஞ்சிச் சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டுவர நோய்எதிர்ப்பு சக்தி கூடும். இஞ்சியின் காரத் தன்மைக்குக் காரணமான ‘ஜிஞ்சரால்’ புற்றுநோய்செல்களின் வளர்ச்சியைத் தடுத்து, அழிக்கிறது. குறிப்பாக, ஆண்களுக்கு ஏற்படும்ப்ராஸ்டேட் புற்றுநோயைத் தடுக்கிறது.

எள்: எள்ளில் தாமிரமும் கால்சியமும் நிறைவாக உள்ளன. வைட்டமின் பி மற்றும் இ, மக்னீசியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, துத்தநாகம், புரதச்சத்து போன்றவையும் உள்ளன. தேன் மற்றும் எள்ளை ஒன்றாகக் கலந்து, தினமும் சாப்பிட்டுவர, தேனில் உள்ளஆன்டிஆக்ஸிடன்ட் வயிற்றுச் சுவரைப் பாதுகாக்கும். எள் வயிற்றில் உள்ள புண்ணைக்குணமாக்கும். இதில் உள்ள துத்தநாகம் தோல் புற்றுநோயைத் தடுக்கும்.

பட்டை: இதில் உள்ள வைட்டமின் ஏ, சி மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட் நம் உடலுக்குத்தேவையான எதிர்ப்புச் சக்தியைத் தந்து, நுரையீரல் புற்றுநோய் உட்பட சில வகைபுற்றுநோய்களையும் வராமல் காக்கிறது.

மிளகு: மிளகில் கால்சியம், இரும்பு, பாஸ்பரஸ் சத்துக்கள் மற்றும் தயமின், ரிபோஃபிளேவின், நியாசின் போன்ற சத்துக்கள் உள்ளன. மிளகில் உள்ளஆன்டிஆக்ஸிடன்ட் உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரித்து, புற்றுநோய்செல்களின் வளர்ச்சியைத் தடுக்கிறது.

முளைகட்டிய பயறு: இதில் லைசின் எனப்படும் அமினோ அமிலம் அதிக அளவில்உள்ளது. சல்ஃபோராபேன் என்ற ரசாயனம் புற்றுநோய் செல்களை அழிக்கிறது. பயறாகச்சாப்பிடுவதைக் காட்டிலும், முளைகட்டி பயறாகச் சாப்பிடும்போது, அதில்சல்ஃபோராபேன் அளவு 50 சதவிகிதம் அதிகரிக்கிறதாம். முழுப் பலனையும் பெற, முளைகட்டிய பயறைப் பச்சையாகச் சாப்பிடுவதே சிறந்தது.

பச்சைப் பட்டாணி: இதில் அதிக அளவு வைட்டமின் சி மற்றும் கோமெஸ்ட்ரோல்(coumestrol) என்ற நுண் ஊட்டச்சத்து இருப்பதால் ரத்தப் புற்றுநோய், நுரையீரல்புற்றுநோய், ஆசனவாய்ப் புற்றுநோய் போன்றவற்றில் இருந்து காக்கிறது. ஒரு கப்பச்சைப் பட்டாணியில் 10 மி.கி அளவுக்கு கோமெஸ்ட்ரோல் உள்ளது. பச்சைப்பட்டாணியை தினசரி உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம் புற்றுநோய் வராமல்தடுக்கலாம்.

முட்டைக்கோஸ்: முட்டைக்கோஸில் இருக்கும் நியூட்ரியன்ட்ஸ் புற்றுநோய் செல்களின்வளர்ச்சி வேகத்தைக் குறைக்கும். முட்டைக்கோஸில் காணப்படும் இன்டோல்-3-கார்பினோல் (Indole -3-carbinol) மார்பகப் புற்றுநோயிலிருந்துப் பாதுகாக்கிறது.

கேரட்: கேரட்டில் உள்ள பீட்டாகரோட்டின் எல்லா வகைப் புற்றுநோய்களின்தீவிரத்தையும் குறைக்கிறது. வேகவைக்காத பச்சை கேரட்டாக எடுத்துக்கொள்வதுமிகவும் நல்லது.

தக்காளி: வைட்டமின் சி, லைக்கோபீன், ஆன்டிஆக்ஸிடன்ட் அதிகமாக உள்ளதால், நோய்எதிர்ப்பு சக்தி அதிகரித்து புற்றுநோயால் செல்கள் பாதிப்படைவதைத் தடுக்கும். குறிப்பாக, ப்ராஸ்டேட் புற்றுநோயைத் தடுக்கும்.

வெங்காயம் – வெங்காயத்தாள்: புற்றுநோயைத் தடுக்கும் அற்புத மருந்து வெங்காயம்.வெங்காயத்தில் உள்ள அலிசின், கந்தகம் என்ற வேதிப்பொருள் புற்றுநோயை எதிர்க்கும்ஆற்றல் பெற்றது. மேலும், வெங்காயத்தை பச்சையாகச் சாப்பிடுவது நல்லது. வெங்காயத்தாளில் உள்ள கந்தகம் புற்றுநோய் செல்களை அழிக்கக்கூடியது. வைட்டமின்ஏ, இ, சி, கே, தயமின், தாமிரம், பாஸ்பரஸ், மக்னீசியம், பொட்டாசியம், குரோமியம்,மங்கனீஸ், நார்ச்சத்துகள் நிறைந்துள்ளன. வெங்காயத்தாளில் உள்ள பெக்டின் என்னும்நீரில் கரையக்கூடிய கார்போஹைட்ரேட், பெருங்குடல் புற்றுநோய் ஏற்படுவதற்கானவாய்ப்பைக் குறைக்கிறது.

கீரைகள்: பச்சைக் கீரைகளை தினசரி உணவில் சேர்த்துக்கொள்வதால், குடல்புற்றுநோயைத் தடுக்கலாம்.

சர்க்கரை வள்ளிக்கிழங்கு: இதில் உள்ள வைட்டமின் சி, பீட்டாகரோட்டின், ஃபோலேட், நார்ச்சத்துக்கள் என அனைத்தும் இணைந்து புற்றுநோய் செல்களை அழிக்கின்றன. பொதுவாக ஆரஞ்சு நிறக் காய்கறி, பழங்கள் அனைத்தும் மார்பகப் புற்றுநோய், நுரையீரல்,பெருங்குடல் புற்றுநோயைத் தடுக்கும் ஆற்றல் கொண்டவை.

 

காளான்: இதிலுள்ள லெக்டின், நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுவடையச் செய்து, புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தடுக்கும்.

சிட்ரஸ் பழங்கள்: எலுமிச்சை, ஆரஞ்சு, சாத்துக்குடி போன்ற சிட்ரஸ் வகைகளில், உள்ளமோனோதெர்ஃபேன்கள் (Monoterpenes), புற்றுநோயை உருவாக்கும் கார்சினோஜன்களைஅழிக்கும். நார்ச்சத்து, வைட்டமின்கள், கனிமச்சத்துக்கள் நிறைந்து உள்ள சிட்ரஸ் பழச்சாறுகள், உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். வாய், தொண்டை மற்றும்வயிற்றில் வரும் புற்றுநோய்களைத் தடுக்கும்.

கிவிப் பழம்: ஃபோலிக் அமிலம், தாமிரம், மக்னீசியம் மற்றும் வைட்டமின்கள் ஏ, சி, இ, கேநிறைந்தது. வைட்டமின் சி உள்ளிட்ட ஆன்டிஆக்ஸிடன்ட்கள் அதிகம் இருப்பதால், நோய்எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, புற்றுநோய் செல்களைத் தடுக்கும். ரத்தசோகையைத்தடுக்கும். இதய நோய்களிலிருந்து காக்கும்.

ஆப்பிள்: உடல் உள் உறுப்புகளும் சுரப்பிகளும் செயல்பட உதவும் நுண்ணூட்டச்சத்துக்களும் பல்வேறு அமிலங்களும் ஆப்பிளில் உள்ளன. பச்சை ஆப்பிள்களில் உள்ளஆன்டிஆக்ஸிடன்ட், செல்களை புதுப்பிக்கும் செயலைத் தூண்டுகிறது. புற்றுநோயைஉருவாக்கும் செல்களைத் தடுக்கிறது.

சோளம்: மாவுச்சத்து,  நார்ச்சத்து, புரதச்சத்து, கால்சியம், இரும்புச்சத்து, பீட்டாகரோட்டின், தயமின்(Thiamine) மற்றும் நியாசின் ஆகியவை உடலில் உள்ளஉப்பைக் கரைக்கும். புற்றுநோய் செல்களின் பாதிப்பைத் தடுக்கும்.

செர்ரி: மெலட்டோனின் (Melatonin) எனும் நோய் எதிர்ப்புப் பொருள், புற்றுநோயைத்தடுக்கும். புளிப்பான செர்ரி பழத்தில் லூட்டின், ஸி-சாந்தின், பீட்டாகரோட்டின் போன்றஆன்டிஆக்ஸிடன்ட் உள்ளன.

மாதுளை: இரும்புச்சத்து, வைட்டமின் ஏ, சி, இ, கால்சியம், பொட்டாசியம், பாஸ்பரஸ்,ரிபோஃப்ளேவின், ஆன்டிஆக்ஸிடன்ட் போன்ற சத்துக்களை கொண்டது. முதுமையைத்தடுக்கும்.மாதுளை, ப்ராஸ்டேட் புற்றுநோயைத் தடுக்கும் தன்மை கொண்டது.

பேரீச்சம் பழம்: வைட்டமின் ஏ, இ, பி காம்ப்ளக்ஸ், இரும்புச்சத்து, கால்சியம், புரதச்சத்து, நார்ச்சத்து உள்ளிட்ட சத்துக்கள் புற்றுநோய் வராமல் தடுக்கும்.

பாதாம்: இதில் உள்ள வைட்டமின் பி, புற்றுநோயை எதிர்க்கும் சக்திகொண்டது. மலச்சிக்கல், சுவாசக் கோளாறு, இதயக் கோளாறு, சர்க்கரைநோய், ரத்தசோகை,ஆண்மைக் குறைவு மற்றும் பித்தப்பைக் கல் போன்ற பிரச்னைகளைக் களைவதிலும்பாதாம் பருப்பு துணைபுரிகிறது.

புரோகோலி: இண்டோல்-3-கார்பினோல் (Indole -3-carbinol), சல்ஃபோராபைன் உள்ளதால்மார்பகப் புற்றுநோயிலிருந்து பாதுகாக்கிறது.  இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்ப்ராஸ்டேட் புற்றுநோயைக் குறைக்கிறது. இதில் உள்ள வைட்டமின் சி புற்றுநோயைஉருவாக்கும் நைட்ரஜன் மூலக்கூறுகளைத் தடுக்கும்.

கிரீன் டீ: இதில் உள்ள கேட்டசின் என்ற பொருள், நுரையீரல், மார்பகம், ப்ராஸ்டேட்,குடல், சிறுநீர்ப்பை மற்றும் சருமப் புற்றுநோய்களைத் தடுக்கும். தினமும் ஒரு கப் டீசாப்பிடலாம்.

முட்டை: தினசரி ஒரு முட்டையை உணவில் சேர்த்துக்கொள்வதால் மார்பகப்புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் குறையும். முட்டையில் உள்ள கோலைன் என்றபுரதம் நரம்பு மண்டலப் பிரச்னைகளைக் குறைக்கிறது. மேலும் மூளையைக்கட்டுப்படுத்தி, அது சிறப்பாக இயங்கவும், நம் உடலில் உள்ள செல்களை சீராக இயக்கவும்உதவுகிறது.

மீன்: மீன்களில் உள்ள எண்ணெய் உயர் ரத்த அழுத்தம், ரத்தப் புற்றுநோயைக்குணமாக்கும். மீன்களில் உள்ள புரோலாக்ட்டின் என்ற சேர்மம் ரத்தப் புற்றுநோய்க்குக்காரணமான திசுக்களை அழிக்கும்.

ஆலிவ் எண்ணெய்:  ஆலிவ் எண்ணெயில் உள்ள ஒமேகா 3 கொழுப்பு, புற்றுநோய்செல்லுக்கு எதிராகச் செயல்படும் தன்மைகொண்டது. ஆலிவ் எண்ணெயில் உள்ளபாலிஃபீனால் மார்பகப் புற்றுநோயைத் தடுக்கும் ஆற்றல் கொண்டது.

அவகேடோ: உடலில் உள்ள கெட்ட கொழுப்பைக் குறைத்து, நல்ல கொழுப்பைஅதிகரிக்கும். புரதச்சத்து, மாவுச்சத்து மற்றும் லூட்டின் எனும் ஆன்டிஆக்ஸிடன்ட்நிறைந்திருப்பதால், ஆண்களுக்கு வரும் ப்ராஸ்டேட் புற்றுநோயையும் பெண்களுக்குவரும் மார்பகப் புற்றுநோயையும் தடுக்கிறது. ஃபோலிக் அமிலம், ஒலியிக் அமிலம், வைட்டமின் கே உள்ளன. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச்செய்யும். நரம்புமண்டலத்தை வலுப்படுத்தும். புற்றுநோய் செல்களை எதிர்த்துப் போராடும்.

டார்க் சாக்லேட்: இதில், கொக்கோ நிறைந்துள்ளது. கொக்கோவில் உள்ள பென்டாமெர்போன்ற ஃபிளேவனாய்டுகள் புற்றுநோயை எதிர்த்துப் போராடும். புற்றுநோயில் இருந்துவிலகி இருக்க உதவும் மிக ருசியான வழிகளில் இதுவும் ஒன்றாகும்.

Natural home remedies for Fever

மருத்துவர் கு.சிவராமன்

fever-infoமழைக்காலத்தில் அதிக அளவில் நம்மைத் தாக்குவது காய்ச்சல். இப்போதெல்லாம் காய்ச்சல் வந்தாலே, `என்னது காய்ச்சலா? உஷாரா இருங்க… எல்லா பக்கமும் `டெங்கு’வாம், `சிக்குன்குனியா’வாம்… ஏதோ மர்மக் காய்ச்சலாம்!’ எனக் கலவரத்துடன்தான் காய்ச்சலை எதிர்கொள்கிறோம். மூன்று நாட்களுக்கு மேல் ஜுரம் இருந்தால், மருத்துவர் பரிசோதனைக்கு நீட்டும் பட்டியலில் டைஃபாய்டு, மலேரியா, காமாலை, டெங்கு, சிக்குன்குனியா… என விதவிதமான பரிந்துரைகள்.
காய்ச்சல் ஏன் வருகிறது, மழைக்காலத்தில் அதைத் தவிர்ப்பது எப்படி எனத் தெரிந்துகொள்வோமா?
  • காய்ச்சல் ஒரு தனி நோய் அல்ல. வெள்ளை அணுக்களைக்கொண்டு, நமது உடல் கிருமிகளுடன் நடத்தும் யுத்தத்தில் கிளம்பும் வெப்பமே காய்ச்சல். வலுவான நோய் எதிர்ப்பு ஆற்றல் இல்லாதபோது ஜுரம் கொஞ்சம் நீடிக்கலாம். புதுவகையான பாக்டீரியா, வைரஸ்களுக்கு எதிரான யுத்தம் எனில், ஜுரம் நீடிக்கலாம். உடலில் வெள்ளை அணுக்கள் – கிருமிகளுக்கு இடையிலான யுத்தத்தில் ரத்தத் தட்டுக் குறைவு, உடல் நீர்ச்சத்துக் குறைவு, ஈரல்-மண்ணீரல் வீக்கம் எனத் தொந்தரவுகள் அதிகரிக்கும். அதுவே உடலின் இயல்பு வாழ்க்கையைப் பாதித்து, சுகவீனத்தை (ஜுரத்தை) உண்டாக்கும்.
  • இனிப்பு, பால், நீர்க்காய்கறிகளைத் தவிருங்கள். மருத்துவர் பால் அருந்தச் சொல்லியிருந்தால், அதில் மிளகு, மஞ்சள் தூள், பனங்கற்கண்டு சேர்த்து, காலை 8 மணி முதல் மாலை 6 மணிக்குள் மட்டும் அருந்துங்கள். இரவிலும் அதிகாலையிலும் வேண்டாம்!
  • ஆவி பிடித்தல், நெற்றிக்குப் பற்று இடுவது, சுக்கு-மல்லிக் கஷாயம் அருந்துதல்… என வாரம் ஒரு நாள் கண்டிப்பாகச் செய்யுங்கள். சூடான தேங்காய் எண்ணெயில் கற்பூரம் கலந்து தயாரிக்கப்படும் கற்பூராதி தைலத்தை, குழந்தைகளுக்கு நெஞ்சில் தடவிவிடுங்கள்.
  • மிளகு, மஞ்சள், லவங்கப்பட்டை, கிராம்பு, கொள்ளுப் பயறு, நாட்டுக்கோழி முதலான, உடலுக்கு வெம்மை தரும் உணவுகளை அவ்வப்போது சேர்த்துக்கொள்வது நல்லது.
  • காலையில் கரிசாலை முசுமுசுக்கை இலை போட்ட தேநீர், மதியம் தூதுவளை மிளகு ரசம், மாலையில் துளசி பச்சைத் தேயிலை தேநீர்… இவை மழைக்கால நோய் எதிர்ப்பு உணவுகள்.
  • ரத்தத் தட்டுக்களை உயர்த்த, சளியை வெளியேற்ற, இருமலை நீக்க, இரைப்பையை ஆரோக்கியமாக வைத்திருக்க மிகச் சிறந்த மருந்து ஆடுதொடா இலைச்சாறு. மருத்துவர் ஆலோசனையுடன், சரியான இலைதானா என உறுதிப்படுத்திக்கொண்டு ஓரிரு இலையை அரைத்து, சாறு எடுத்து, மழைக்காலத்து சளி காய்ச்சலை எளிதில் போக்கலாம்.
  • இரு சக்கர வாகனத்தின் முன்புறத்தில் குழந்தைகளை அமர்த்தி, மாலை, இரவு நேரங்களில் பயணம் செய்யாதீர்கள். வாடைக் காற்று தாக்காமல் காதுகளைக் கவனமாக மூடிக்கொள்வது நல்லது!
  • முதலில், காய்ச்சல் வராமல் தடுக்க முழு முயற்சி எடுக்க வேண்டும். தண்ணீரைச் சேமிக்கும் பாத்திரத்தை மூடி வையுங்கள். வீட்டுக்கு வெளியே மூலையில் நீங்கள் போட்டு வைத்திருக்கும் பழைய பெயின்ட் டப்பா, ரப்பர் டயர், பாத்திரங்களை அகற்றுங்கள். வேப்பம் புகையோ, கார்ப்பரேஷன் கொசுவிரட்டிப் புகையோ காட்டுங்கள். கொதித்து ஆறிய தண்ணீரை மட்டுமே அருந்துங்கள். சூடாக, அப்போது சமைத்த உணவை உண்ணுங்கள். லேசான தும்மல், ஜுரம் இருக்கும்போது, பொது இடங்களுக்குச் செல்வதைத் தவிருங்கள்.

Source : http://www.vikatan.com/news/health/71359-treatment-tips-for-fever-nalam-nallathu-1-dailyhealthdose.art

வேப்பமரத்தின் மருத்துவ பயன்கள்

veppam-illai

வேப்பின் பல பயன்களை பற்றி அறிந்திருப்போம். வேப்பிலையை வேறு எந்த மாதிரி எல்லாம் உபயோகப்படுத்தலாம் என இங்கே பார்க்கலாம். பித்த  பிரச்சனை மற்றும் கிருமியால் அவதி படுபவர்கள் வேப்பம்பூவை ரசம் வைத்து சாப்பிடுவது மிகவும் நல்லது. அவ்வாறு சாப்பிட்டால் உடலில் ஏற்படும்  அதிகப்படியான பித்தம் குறைகிந்துவிடும். உடலில் உள்ள ஒரு சிறு கிருமிகளும் அழிந்து விடும்.

வேப்பம் பூவை உலர்த்தி பொடியாக்கி மஞ்சள் தூளுடன் கலந்து தேய்த்துக் குளித்து வந்தால் தோல் வியாதி நீங்கிவிடும். அந்த பொடியை தணலில்  போட்டு வீடு முழுவதும் புகையை பரவ விட்டால் விஷப்பூச்சிகள், கொசு, மூட்டைபூச்சி தொல்லைகள் ஓழிந்துவிடும்.  தினமும் வேப்ப இலைகளை  நீரில் போட்டு வைத்து விட்டு ஒரிரு மணி நேரம் கழித்து குளிக்க தோல் வியாதியே வராமல் இருக்கும். வேப்ப இலை கொத்துகள் நான்கை எடுத்து  தண்டு மட்டும் வெண்ணீரில் படுமாறு செய்து கால்மணி நேரம் ஊறவையுங்கள். பிறகு அந்த சாற்றை இரண்டு நாட்கள் குடித்து வர வயிற்று எரிச்சல்  நிற்கும்.

வேப்பிலை சாற்றை எடுத்து மோருடன் கலந்து சாப்பிட வயிற்று பூச்சிகள் ஓழியும். வேப்பம் பூவை லேசாக வாட்டி தலையில் கட்டிக் கொண்டால்  பேன், பொடுகு, ஈறு போன்றவை அகன்று விடும். வேப்பிலைக் கொழுந்தை தினமும் பச்சையாகச் சிறிதளவு மென்று வந்தால் வயிறு சம்பந்தமான  தொல்லைகள் வரவே வராது. வேப்பிலைக் கொழுந்தை இடித்து சாறு பிழிந்து அதில் சிறிது தேனைச் சேர்த்து இரவு உணவுக்குப் பின் சாப்பிட்டு  வந்தால் வயிற்றில் உள்ள பூச்சிகள் இறந்தோ உயிருடனோ உடலை விட்டு வெளியேறிவிடும்.

வேப்பமரம் நட்டு வைத்தால், வைத்தியர் தேவையில்லை!

நம் தேசத்தில் பாரம்பரிமாக, குறிப்பாக தமிழகத்தில் பல்வேறு ஆன்மீக சடங்குகளில் மட்டுமல்லாது, நோய்தீர்க்கும் மூலிகையாகவும் அதிகமாகப் பயன்படுத்தப்பட்டு வருவது வேம்பு! வயிற்றிலிருக்கும் பூச்சியை வெளியேற்றுவதற்கு சிறுபிள்ளைகளை மடக்கிப்பிடித்து, சங்கில் வைத்து வேப்பிலைச் சாற்றை ஊற்றிவிடும் அக்காமார்களை இன்றும் நம் கிராமங்களில் பார்க்கமுடியும்.

veppamaram-medical-benefitsவேப்பிலையைப் பற்றி சத்குரு அவர்கள் சொல்லும்போது, அபாரமான சக்தியைக் கொண்டது வேப்பிலை என்று குறிப்பிடுகிறார். ஈஷா யோகா மையத்தில் தினமும் காலையில் யோகப் பயிற்சிகளுக்கு முன்பு அனைவரும் சுண்டைக்காய் அளவு வேப்பிலை மற்றும் மஞ்சள் உருண்டைகளை உட்கொள்கின்றனர்.

கிராமங்களில் இன்றும் பூராண்-தேள் போன்ற விஷக்கடிகளுக்கு கூட, கடிபட்ட இடத்தில் வேப்பங்குலைகளை வருடி ‘பார்வை பார்த்தல்’ என்ற பெயரில் வைத்தியம் செய்வார்கள். ஆனால், இதெல்லாம் மூடநம்பிக்கைகள் என பொத்தாம் பொதுவாக ஒதுக்கி வைத்துவிட முடியுமா என்பதை அறிவியலும் மக்களும்தான் முடிவு செய்ய வேண்டும்!
ஏதோவொரு காரணத்தால் உடல் மற்றும் மனநிலையில் சோர்வு அல்லது பாதிப்பு ஏற்படும்போது அந்த மனிதருக்கு வேப்பிலை படுக்கையில் இருக்கும்போது, அவருக்குள் ஒருவித புத்துணர்ச்சி பிறக்கிறது. மேலும், வேப்ப மரம் தரும் நிழல் ஆரோக்கியம் தருவதாகவும் இருக்கிறது. நம் ஊர் அம்மன் கோயில்களில் வேப்பிலைகள் பிரசாதமாகவும் வழங்கப்படுகிறது.
 வேப்பிலைகள் மட்டுமல்லாமல், வேப்ப மரத்தின் பூ, காய், பட்டை என அனைத்து பாகங்களும் மருத்துவ பயன் கொண்டவையே! தொற்றுநோய்கள் கிராமங்களைக் காட்டிலும் நகரங்களில் விரைவாகப் பரவுவதற்கு காரணம், வேப்பமரங்கள் குறைவாக இருப்பதுதான். வேப்பமரத்திலிருந்து வீசும் காற்று ஒருவித மருத்துவகுணம் வாய்ந்ததாகும். இதன்மூலம் சுற்றுச்சூழலிலுள்ள தீங்கு விளைவிக்கும் பாக்டீரியா மற்றும் வைரஸ் போன்ற நுண்ணுயிரிகள் அழிக்கப்படுவதாகவும் நம்பப்படுகிறது. நம் அனைவரின் வீட்டின் முன்பும் ஒரு வேப்பமரம் இருப்பது அனைவரின் வீட்டின் முன்பும் ஒரு மருத்துவர் இருப்பதற்கு சமம்தான்.
கோடை காலத்தில் வேப்ப மரங்கள் தழைத்து வளருகின்றன. தழைத்து நிற்கும் பசுமையான வேப்பமரங்களை தினந்தோறும் பார்க்கும்போது கண்களுக்கு குளிர்ச்சி உணடாகுமென நாட்டு வைத்தியத்தில் சொல்கிறார்கள். இப்படியாக நாம் வேப்ப மரங்கள் உள்ள சூழலில் வாழ்வதால் உண்டாகும் நன்மைகளை சொல்லிக்கொண்டே போகலாம். அதில் முக்கியமாகச் சொல்ல வேண்டியது, அக்னி நட்சத்திரம் போன்ற சூழ்நிலையில் வேப்ப மரங்கள் தரும் குளிர்ச்சியான நிழல் ஒரு வரபிரசாதம்! கொளுத்தும் வெயிலில் நூறு மீட்டர் நடப்பதற்குள் அங்கே இடையில் ஒரு வேப்பமரம் ரோட்டோரமாக நின்றிருந்தால், அதைவிட ஒரு சொர்க்கம் இருக்காது என்பது அனுபவித்து பார்த்தவர்களுக்கு நன்றாக விளங்கும்.
 நாம் ஆளுக்கொரு வேம்பு நட்டு வளர்த்தால், ஆரோக்கியமான வருங்கால தலைமுறைகளைப் பெறமுடியும் என்பது உறுதி. தமிழகத்தின் பருவநிலையும் மண்ணும் வேம்பு வளர்வதற்கு உகந்ததாக அமைந்துள்ளதால், வேப்ப மரங்களைப் பராமரிப்பதற்கு பெரிதாக நாம் மெனக்கெடத் தேவையில்லை.
Source : http://isha.sadhguru.org/blog/ta/veppamaram-nattu-vaithal-vaithiyar-thevaiyillai/

அறிவைப் பெருக்கும் தோப்புக்கரணம் (Toppukkaranam)

ஒரு காலத்தில் தோப்புக்கரணம் போடுவது என்பது பள்ளிகளில் மிகச் சாதாரணமான விஷயம். தவறு செய்தாலோ, வீட்டுப்பாடம் எழுதி வரா விட்டாலோ ஆசிரியர்கள் மாணவர்களைத் தோப்புக்கரணம் போட வைப்பது வாடிக்கை. பரிட்சை சமயத்தில் பக்தி அதிகரித்து மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற தாங்களாகவே பிள்ளையார் முன் தோப்புக்கரணம் போடுவதுமுண்டு. ஆனால் இக்காலத்தில் தோப்புக்கரணம் போடுவதை அதிகமாக நாம் காண முடிவதில்லை.

Thoppukaranam

* தினந்தோறும் அதிகபட்சம் மூன்று நிமிடங்கள் தோப்புக்கரணம் போட்டாலேகூட போதும்.

* உங்கள் கால்களை உங்கள் தோள்களின் அகலத்திற்கு அகட்டி வைத்து நின்றுகொள்ளுங்கள்.

* உங்கள் பாதங்கள் நேராக இருக்கட்டும்.

* வலது காதை இடது கையின் பெருவிரலாலும் ஆட்காட்டி விரலாலும் பிடித்துக்கொள்ளுங்கள்.

* அதேபோல் இடது காதை வலது கையின் பெருவிரலாலும் ஆட்காட்டி விரலாலும் பிடித்துக்கொள்ளுங்கள்.

* பிடித்துக் கொள்ளும்போது இடது கை உட்புறமாகவும், வலது கை வெளிப்புறமாகவும்
இருக்க வேண்டும் என்பது முக்கியம்.

* மூச்சை நன்றாக வெளியே விட்டபடி, அப்படியே உட்கார்ந்து மூச்சை உள்ளே நன்றாக இழுத்தபடி எழுந்து   நில்லுங்கள்.

* ஆரம்பத்திலேயே மூன்று நிமிடங்கள் தொடர்ந்து செய்வது கடினமாக இருப்பவர்கள் ஒரு நிமிடம், இரண்டு நிமிடம், மூன்று நிமிடங்கள் என படிப்படியாக அதிகரித்துக்கொள்ளுங்கள்.

…………………………………………………

மூளைசெல்கள் புத்துணர்ச்சி பெறுகின்றன . நாடிகள் சுத்தம் பெறுகின்றன. நம் உடலிலுள்ள நரம்பு மண்டலங்கள் அனைத்தும் சேருமிடம் காது மடல்கள். தோப்புக்கரணம் செய்யும் போது காது மடல்களை இழுப்பதால் அனைத்து நரம்புகளும் தூண்டப்படுகின்றன.

லாஸ் ஏஞ்சல்ஸைச் சேர்ந்த மருத்துவர், எரிக் ராபின்ஸ் தோப்புக்கரணத்தை பற்றிச் சொல்லும்போது, “இந்த உடற்பயிற்சி மூலம் மூளையின் செல்களும், நியூரான்களும் தூண்டப்பட்டு சக்தி பெறுகின்றன.” என்கிறார். அவர் தன்னிடம் வரும் நோயாளிகளுக்கு அந்த உடற்பயிற்சியை சிபாரிசு செய்வதாகக் கூறுகிறார். மேலும், தேர்வுகளில் தோல்வியடையும் மாணவர்கள் இந்த உடற்பயிற்சியை சில நாட்கள் தொடர்ந்து செய்தபிறகு, நல்ல மதிப்பெண் பெற்று வெற்றி பெற்றதாகவும் அவர் கூறுகிறார்.

அதேபோல யேல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த நரம்பியல் நிபுணரான டாக்டர் யூஜினியஸ் அங் என்பவர், ”தோப்புக்கரணம் போடும்போது காதுகளைப் பிடித்துக்கொள்வதன் மூலம் மிக முக்கிய அக்குபஞ்சர் புள்ளிகள் தூண்டப்படுகின்றன” என்று சொல்கிறார். ”இடது கையால் வலது காதையும், வலது கையால் இடது காதையும் பிடித்துக்கொண்டு உட்கார்ந்து எழுகையில் மூளையின் இரு பகுதிகளும் பலனடைகின்றன, மூளையின் நரம்பு மண்டலம் தூண்டப்படுகிறது.” எனவும்  அவர் சொல்கிறார்.

 

எதிரியை வெற்றிகொள்வது எப்படி?

ஆதிகாலம் தொட்டு இன்று வரை நடந்துகொண்டிருக்கும் நிதர்சனம் இது – நமக்கு வேண்டப்படாதவரோ அல்லது நம் எதிரியோ அவர் வாழ்க்கையில் சரிவை சந்தித்தால் நமக்கு மகிழ்ச்சிதான். அந்த எதிரியையும் வெற்றிகண்டு நாம் வாழ்வில் உயர்வது எப்படி? இக்கட்டுரையில் தெளிவுபடுத்துகிறார் சத்குரு…

Sadhguru-Man-Game-1

வெளியே தொடர்ந்து வேட்டுச் சத்தம் கேட்டது. காரணம் கேட்டேன். யாரோ ஒரு நடிகரின் படம் தோல்வியடைந்துவிட்டதாம். இன்னொரு நடிகரின் ரசிகர் மன்றம் பட்டாசு வெடித்துக் கொண்டாடுவதாகச் சொன்னார்கள். என்ன அபத்தம் இது?

கால்பந்து விளையாடப் போகிறீர்கள். உங்களுக்கு எதிராக ஒரு அணி இருக்கும். அது உங்களைவிட திறமையான அணியாக இருந்தால், உங்களை கோல் போடவிடாமல் தடுக்கும். நீங்கள் அசந்த நேரம் உங்கள் பக்கம் கோல் போட்டுவிடும். அதற்காக அந்த அணியை எதிரியாக நினைத்து, மைதானத்தை விட்டே துரத்திவிடுவீர்களா என்ன?

எதிர்க்க இன்னொரு அணியே இல்லை என்றால், நீங்கள் நினைத்த நேரத்தில் பந்தை எடுத்துக் கொண்டு எதிர்ப்பக்கம் போகலாம். அங்கேயிருக்கும் இரண்டு கம்பங்களுக்கு நடுவில் எத்தனை தடவை வேண்டுமானாலும் உதைத்து கோல் போடலாம். ஆனால், அதன் பெயர் கால்பந்தாட்டமா? அல்லது, வெற்றி பெற்றுக் காட்ட வேண்டும் என்பதற்காக, உங்களுக்கு இணையாக இல்லாத கற்றுக்குட்டிகளுடன் மட்டும் விளையாடிக் கொண்டிருப்பீர்களா?

யமகுசி என்ன செய்தார்?

யமகுசி, கராத்தேயில் மிகச் சிறந்த வீரர். பல போட்டிகளில் பங்கேற்று வெற்றிகளைக் குவித்தவர். ஒருமுறை போட்டியில் அவர் தன் குருவையே எதிர்கொள்ள வேண்டியிருந்தது. தனக்குத் தெரிந்த அத்தனை விதத்திலும் முயற்சி செய்தார் யமகுசி. குருவை வீழ்த்த முடியவில்லை. கொஞ்சம் கொஞ்சமாகப் பொறுமை இழந்தார் யமகுசி. கோபத்தில் தவறான சில வீச்சுகளை முயற்சி செய்ததில், நிறைய காயங்களானதுதான் மிச்சம்.போட்டி முடிந்ததும், குருவைப் பணிந்து தன் தோல்விக்குக் காரணம் கேட்டார்.
“நீ என்னை எப்படிப் பார்த்தாய், மகனே?”
“போட்டியென்று வந்துவிட்டால், குரு, சிஷ்யன் எல்லாம் கிடையாது. உங்கள் பலவீனங்களை கண்டுபிடித்து உங்களை எப்படியாவது வீழ்த்தி விட வேண்டும் என்றுதான் பார்த்தேன். ஆனாலும், முடியவில்லையே குருவே!”
ஒரு தரையில் ஒரு கோடு வரைந்தார்.
“இதை சிறிதாக்க வேண்டுமானால், என்ன செய்வாய்?”
யமகுசி அந்தக் கோட்டின் ஒரு பகுதியை அழித்துக் காட்டினார்.
“இதே கோடு அழிக்க முடியாதபடி பாறையில் இருந்தால்?”
யமகுசிக்கு விடை சொல்லத் தெரியவில்லை.
குரு அந்தக் கோட்டின் பக்கத்தில் அதைவிட ஒரு பெரிய கோடு வரைந்தார்.
“இப்போது முதல் கோடு சிறியதாகி விட்டதல்லவா? யாரையாவது வெற்றி கொள்ள வேண்டுமானால், அவனைத் தாழ்த்த வேண்டுமென்று முயற்சி செய்யாதே! அவனைவிட அதிகமான உன் திறமையை வளர்த்துக் கொள். உனக்காக விளையாடு. அவனுக்கு எதிராக விளையாடாதே!”
யமகுசி தெளிவடைந்தார்.

நீங்கள் எந்தத் துறையில் இருந்தாலும், போட்டியை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். உங்களுடன் போட்டு போடுபவரை உங்கள் எதிரியாகப் பார்ததீர்களானால், உங்கள் நிம்மதி தொலைந்து போகும்.
யார் முட்டாள்?
தெருவில் நடந்து கொண்டிருக்கிறீர்கள். முன்பின் தெரியாத ஒருவர் உங்கள் பக்கத்தில் வந்து, காதருகில் ‘முட்டாள்’ என்று சொல்லிவிட்டுப் போய்விடுகிறார். உடனே உங்கள் ரத்தம் கொதிக்கும். அப்படிச் சொன்னவர்கள் உங்களைவிடச் சிறியவராக இருந்தால், சண்டைக்குப் போவீர்கள். வலியவராக இருந்தால்?
காலையில் எழுந்திருக்கிறீர்கள். ஜன்னலைத் திறக்கிறீர்கள். அவர் இப்போது எதுவும் செய்ய வேண்டாம். காறித் துப்ப வேண்டாம். கல் எடுத்து அடிக்க வேண்டாம். சும்மா நின்றிருந்தாலே போதும். உங்களுக்குப் படபடப்பு வந்துவிடுமல்லவா? காரியங்கள் தாறுமாறாகிவிடுமல்லவா?
அவர் வலியவரோ, எளியவரோ… ஆனால், சொன்னபடி உங்களை முட்டாளாக்கிக் காட்டிவிட்டார் அல்லவா?

நீங்கள் நண்பர் என்று நினைப்பவருக்குக் கூட இவ்வளவு சக்தி இல்லையே? யாரையாவது நீங்கள் எதிரியாக நினைத்தால், அவர் ஆற்றல் மிகுந்தவராகி விடுவதைக் கவனித்தீர்களா?
நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள்… நீங்கள் இங்கே யாருடனும் போர் புரிவதற்காக வரவில்லை. ஒருவரை அழித்தால், அடுத்தவர் தலை தூக்கிக் கொண்டு நின்றிருப்பார். உங்கள் ஆற்றலின் பெரும்பகுதி ஆக்கப்பூர்வமாய்ப் பயன்படாமல், அழிப்பதிலேயே வீணாகிவிடும்.
அடுத்தவரை எதிரியாக நினைக்காதீர்கள்.
பொறாமைக்கும், அச்சத்துக்கும் இடம் கொடுத்தால் உங்கள் திறமைதான் மழுங்கிப்போகும். எனவே, நீங்கள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் உங்களுக்காக இருக்கட்டும். இன்னொருத்தருக்கு எதிராக இருக்க வேண்டாம். அப்போதுதான், உங்களுக்கான சிகரத்தைச் சென்றடையும்வரை அந்தப் பயணம் ஆனந்தமாயிருக்கும்.
முழுத்திறமையும் வெளிப்படுத்தும் விதமாகச் செயல்படுவதில்தான் உண்மையான வெற்றியே இருக்கிறது. அதற்கு உங்கள் உடல், மனம் – இரண்டின் ஆற்றலையும் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளத் தெரிந்து இருக்க வேண்டும்.
இதற்கு முறையான யோகாவை விடச் சிறந்த சாதனம் இல்லை.

Clean air Using House Plants

வீட்டுக்கு ஒரு செடியாவது வளர்ப்போம்

clean air, House PlantsHouse Plants : மரத்தையெல்லாம் அழிச்சாச்சு. இனி, நல்ல காத்துக்கு எங்கே போறது? இனிமே மரம் நட்டாலும் அது வளர்ந்து முழு மரமாகிறதுக்கு 20, 30 வருஷங்கள் ஆகுமே’ என்று சங்கடப்படுபவர்களே… உங்களுக் காகவே இந்த நல்ல செய்தி!

வீட்டிலேயே வளர்க்கக் கூடிய சில குறுஞ்செடிகளில் காற்றில் உள்ள நச்சுக்களைச் சுத்தப்படுத்தும் குணம் நிரம்பி இருக்கிறது என்று நாசா விஞ்ஞானிகளின் ஆராய்ச்சி கூறுகிறது. தமிழ்நாட்டுச் சீதோஷ்ண நிலையில் வாழும் தன்மையையும், அதிக நன்மை களையும் கொடுக்கும்.

கற்றாழை (AloeVera): மருத்துவக் குணங்கள் நிறைந்துள்ள கற்றாழை, காற்றில் உள்ள ஃபார்மால்டிஹைட் என்னும் வேதிப் பொருளை நீக்கும். சருமத் தீப்புண்களுக்கும் மருந்தாகப் பயன்படும்!

சீமை ஆல் (Rubber plant): வெயில் படாத இடங்களில்கூட வாழும் தன்மைகொண்டவை. அதிகமாக அசுத்தக் காற்றை உள்ளிழுத்து அதிகப்படியான ஆக்சிஜனை வெளியிடும்.

வெள்ளால் (Weeping Fig): காற்றின் நச்சுக்களை நீக்கி சுற்றுப்புறத்தின் ஆக்சிஜன் அளவை அதிகப்படுத்தும்.

மூங்கில் பனை (Bamboo Palm) : காற்றில் கலந்துள்ள ஃபார்மால்டிஹைட் நச்சுக்களை நீக்குவதோடு இயற்கையான ஈரப்பதனியாகச் செயல்படும்.

ஸ்னேக் பிளான்ட் (snake-plant): நைட்ரஜன் ஆக்ஸைடு மற்றும் ஃபார்மால்டிஹைடைக் கிரகித்து ஆக்சிஜனை வெளிப்படுத்தும். வறண்ட சூழ்நிலை களில்கூட வாழும் தன்மைகொண்டவை.

கோல்டன் போட்டோஸ் (golden pothos): நாசா விஞ்ஞானிகளின் அறிக்கைப்படி காற்றைச் சுத்தப்படுத்தும் தாவரங்களின் பட்டியலில் மூன்றாம் இடம் பிடித்திருக்கும் இந்தச் செடி, கார்பன் மோனாக்சைடு வாயுவை உறிஞ்சிக்கொண்டு காற்றின் அளவை அதிகரிக்கச் செய்யும்!

வீட்டுக்கொரு மரம் வளர்ப்போம்.