Oct 12, 2017 Kumari News, Pon Radhakrishnan 0
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கோணத்தில் இயங்கிவரும் கேந்திர வித்யாலயா மத்திய அரசு பள்ளியை தரம் உயர்த்த வேண்டி மாண்புமிகு மத்திய நிதி மற்றும் கப்பல்துறை இணை அமைச்சர் திரு.பொன்.இராதாகிருஷ்ணன் அவர்கள் முழுமுயற்சி மேற்கொண்டு கடந்த ஆண்டு 1-ம் வகுப்பிற்கு புதிதாக இரண்டு பிரிவுகளும், அதற்கு முந்தைய ஆண்டு 11-ம் வகுப்பிற்கு புதியதாக ஒரு பிரிவிற்கும் அனுமதி பெற்றுக்கொடுத்தார்கள். இந்நிலையில் அப்பள்ளியில் முதல்வர் பதவி காலியாக இருப்பதை அறிந்து உடனடியாக அப்பணியை பூர்த்தி செய்ய மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சரை வலியுறுத்தியதின் காரணமாக அப்பணி நிரப்பப்பட்டது.
மேலும் இப்பள்ளியில் மாணவர்களுக்கு அடிப்படை வசதிகள் தேவை என்பதற்காக மாண்புமிகு மத்திய அமைச்சர் அவர்கள் பாராளுமன்ற உள்ளூர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 20லட்சம் ஒதுக்கீடு செய்து அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும் நிறுவனங்களுக்கான சேவை நிதி தூத்துக்குடி வ.உ.சி துறைமுக கழகத்திலிருந்து ரூபாய் 15 லட்சம் ஒதுக்கீடு செய்து அப்பணிகள் தொடங்குவதற்கான ஆயத்தங்கள் நடந்து வருகின்றன.
இந்நிலையில் நாகர்கோவில் கோணம் கேந்திர வித்யாலயா மேல்நிலைப்பள்ளியில் தற்காலிக ஆசிரியர்கள் கொண்டு வகுப்புகள் நடத்தப்படுவது அறிந்தவுடன் நிரந்தர ஆசிரியர்களை நியமிக்க மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் மாண்புமிகு திரு.பிரகாஷ்ஜாவடேகர் அவர்களிடம் கேட்டுக் கொண்டதற்கிணங்க 16 நிரந்தர ஆசிரியர்கள் நாகர்கோவில் கேந்திர வித்யாலயாவிற்கு நியமிக்கப்பட்டுள்ளனர்.
Source: Sundar S FB
Jan 28, 2019 0
Jan 28, 2019 0
Jan 28, 2019 0
Jan 28, 2019 0
This architectural pilgrim centre derive its name from the Virgin goddess Kanyakumari, to whom the temple is dedicated. Goddess Parashakti (Devi Kanya) did punishment to protect shiva's hand in a marriage. She sweared to remain a virgin as she couldn't attain her objective...