Marthandam flyover : மார்த்தாண்டத்தில் மேம்பாலம் அமைப்பதற்கான மண் ஆய்வுப்பணி தொடங்கி நடந்து வருகிறது.போக்குவரத்து நெருக்கடிகுமரி மாவட்டத்தில் 2-வது பெரிய நகரமாக மார்த்தாண் டம் விளங்குகிறது. இங்கு பள்ளிகள், கல்லூரிகள், அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள், வர்த்தக மையங்கள், மற்றும் தினசரி சந்தை போன்றவை அமைந்துள்ளன. மார்த்தாண் டம் பகுதிக்கு சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள், மாணவ-மாணவிகள் தினமும் வந்து செல்கிறார்கள்.மார்த்தாண்டத்தில் அமைந் துள்ள தேசிய நெடுஞ்சாலை மிகவும் குறுகலாக அமைந் துள்ளது. இதனால், எப் போதும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு வருகிறது.தொடரும் போக்குவரத்து நெருக்கடியால், திருவனந்த புரம், கன்னியாகுமரி போன்ற முக்கியமான பகுதிகளுக்கும், திருவனந்தபுரம் விமான நிலையத்திற்கு செல்பவர் களும், ரெயில் நிலையத் திற்கு செல்பவர்களும், மாணவ- மாணவிகளும், பொதுமக்க ளும் குறித்த நேரத்தில் செல்ல முடியாமல் தவிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். அத்துடன் கடும் போக்குவரத்து நெருக் கடியால் விபத்துகளும் ஏற்பட்டு வருகின்றன.மேம்பாலம்இந்தநிலையில் மார்த் தாண்டம் போக்குவரத்து நெருக்கடிக்கு தீர்வு காண மாற்று ஒருவழிப்பாதை அமைக்க வேண்டும் என பொதுமக்களும், அரசியல் கட்சியினரும் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகிறார்கள். ஆனால், அந்த கோரிக்கை இதுவரை நிறைவேற்றப்படவில்லை.இதற்கிடையே மார்த்தாண் டம் தேசிய நெடுஞ்சாலையில் பம்மம் பகுதியில் இருந்து அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வரை மேம்பாலம் அமைக்க திட்டமிடப்பட் டுள்ளதாக கூறப்படுகிறது.அதன் ஒருகட்டமாக மார்த்தாண்டம் சந்திப்பு பகுதியில் நெடுஞ்சாலைதுறை சார்பில் மண் ஆய்வு செய்யும் பணி தொடங்கப் பட்டுள்ளது. இதற்காக ஆழ்துளை போடப்படும் எந்திரம் மூலம், ஊழியர்கள் மண் ஆய்வு செய்து வருகிறார்கள். மண் ஆய்வுப்பணி தொடங்கி உள்ளதால் மார்த் தாண்டத்தில் மேம்பாலம் அமைக்கும் பணிகள் விரைவில் தொடங்கலாம் என பொதுமக்கள் மத்தியில் மகிழ்ச்சியும், எதிர்பார்ப்பும் உருவாகி உள்ளது
Source : Daily Thanthi