kanyakumari : அரை நூற்றாண்டு வரலாறு அடிபட்டு போனது

சில தொகுதிகளில் வெற்றி பெறும் கட்சியே, ஆட்சி அமைக்கும் என்ற, ‘ராசி’ உண்டு. அந்த வகையில், அரை நுாற்றாண்டாக இந்த ராசி உடைய முக்கியமான தொகுதி, கன்னியாகுமரி.
கடந்த, 1971ம் ஆண்டு முதல், இந்த தொகுதியில் வெற்றி பெறும் கட்சியே, மாநிலத்தில் ஆட்சி அமைத்துள்ளது.

3114

1971ல் நடந்த தேர்தலில், தி.மு.க., வேட்பாளர் ராஜா பிள்ளை வெற்றி பெற்றார்; கருணாநிதி தலைமையில் தி.மு.க., ஆட்சி அமைந்தது.பின், தி.மு.க.,வில் இருந்து வெளியேறிய எம்.ஜி.ஆர்., அ.தி.மு.க.,வை துவங்கி, 1977ல் சட்டசபை தேர்தலை சந்தித்தார். 1977 முதல், 84 வரை, கன்னியாகுமரி தொகுதி, அ.தி.மு.க., கோட்டையாகவே இருந்தது.அதன்பின், 1989ல் நடந்த தேர்தலில், மீண்டும் இங்கு தி.மு.க., வேட்பாளராக சுப்பிரமணிய பிள்ளை வெற்றி பெற, தி.மு.க., ஆட்சி அமைத்தது. 1991 தேர்தலில், அ.தி.மு.க., வேட்பாளர் வெற்றி பெற, ஜெயலலிதா, முதல் முறையாக முதல்வராக பதவியேற்றார்.

அதைத் தொடர்ந்து நடந்த தேர்தல்களில், 1996ல் தி.மு.க.,வின் சுரேஷ்ராஜனும், 2001ல், அ.தி.மு.க.,வின் தளவாய் சுந்தரமும், 2006ல், சுரேஷ்ராஜனும், 2011ல், கே.டி.பச்சைமாலும் வெற்றி பெற்றனர். அப்போதெல்லாம் அவர்கள் சார்ந்த கட்சிகளே ஆட்சி பீடத்தில் அமர்ந்தன.
பிரிந்த ஜாதி ஓட்டுகள்தொகுதியில் பெரும்பான்மையாக வெள்ளாளர் சமுதாயத்தினர் தான் உள்ளனர். அதனால் தான், அந்த சமுதாயத்தைச் சேர்ந்தவர்களையே, தி.மு.க., – அ.தி.மு.க., கட்சிகள் நிறுத்தி வந்தன. இப்படிப்பட்ட சூழ்நிலையில், 2011ல் முதல் முறையாக, நாடார் சமுதாயத்தைச் சேர்ந்த கே.டி.பச்சைமால் நிறுத்தப்பட்டார்.

குளச்சல் தொகுதியைச் சேர்ந்த அவர், இங்கு வெற்றி பெற்று, அமைச்சராகவும் ஆனார். அப்போது, இந்த தொகுதியில் போட்டியிட்ட வெள்ளாளர் சமுதாயத்தைச் சேர்ந்த சுரேஷ் ராஜன் தோல்வியடைந்தார்.அ.தி.மு.க., பாணியை பின்பற்றி, இம்முறை கன்னியாகுமரி தொகுதியில், தி.மு.க., வேட்பாளராக கிறிஸ்தவ நாடாரான ஆஸ்டின் நிறுத்தப்பட்டார். அவரை எதிர்த்து, வெள்ளாளர் சமுதாயத்தைச் சேர்ந்த தளவாய் சுந்தரம் போட்டியிட்டார்.

இதில், அரை நுாற்றாண்டு வரலாற்றை மாற்றும் வகையில், மாநிலத்தில் அ.தி.மு.க., ஆட்சியைப் பிடிக்க, தொகுதியில் அக்கட்சி தோல்வியை சந்தித்துள்ளது.தொகுதியில் வெள்ளாளர் சமுதாயத்தைச் சேர்ந்த தளவாய் சுந்தரமும், பா.ஜ., வேட்பாளர் மீனா தேவும் போட்டியிட்டதால், ஜாதி ஓட்டுகள் பிரிந்து, தி.மு.க.,வின் நாடார் வேட்பாளர் வெற்றி பெற வாய்ப்பாகி விட்டது.

தி.மு.க., – அ.தி.மு.க., வேட்பாளர்களுக்கு இடையிலான வித்தியாசம், 5,912 ஓட்டுகள் தான். ஆனால், பா.ஜ., வேட்பாளரோ, 24 ஆயிரத்து, 638 ஓட்டுகளைப் பெற்றுள்ளார். இதில் பெரும் பங்கு, வெள்ளாள சமுதாயத்தினரின் ஓட்டுகள் என்பதை மறுக்க முடியாது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *