கன்னியாகுமரி மாவட்டம் தோப்புவிளை முத்துமாரியம்மன் கோயில் கலையரங்கம் அடிக்கல் நாட்டு விழா (பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி 6 லட்சம் ஒதுக்கீடு)

Minister of State for Road Transport & Highways and Shipping, Government of India. MP from Kanniyakumari Lok Sabha Constituency.
கன்னியாகுமரி மாவட்டம் தோப்புவிளை முத்துமாரியம்மன் கோயில் கலையரங்கம் அடிக்கல் நாட்டு விழா (பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி 6 லட்சம் ஒதுக்கீடு)

கன்னியாகுமரி மாவட்டம் புன்னவிளை முத்தாரம்மன் கோயில் கலையரங்கம் திறப்பு விழாவில் (பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி 6 லட்சம் ஒதுக்கீடு) குதி மேம்பாட்டு நிதி 6 லட்சம் ஒதுக்கீடு)

மண்டைக்காடு சாஸ்தா கோயில் அருகே உயர்கோபுர மின்விளக்கு மக்களின் பயன்பாட்டிற்கு அர்ப்பணித்த போது (நிதி ஒதுக்கீடு 3 லட்சம்)

பொன். இராதாகிருஷ்ணன் அவர்களால் பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நீதியில் இருந்து 10 லட்சம் ஒதுக்கீடு செய்து கன்னியாகுமரி மாவட்டம், மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் கலையரங்கம் அடிக்கல் நாட்டு விழாவிலும் கலந்து கொண்டார்


மாண்புமிகு மத்திய நிதி மற்றும் கப்பல்துறை இணையமைச்சர் திரு.பொன்.இராதாகிருஷ்ணன் அவர்கள்  இன்று(20/09/2018) டெல்லியில்மத்திய விமானப் போக்குவரத்து மற்றும் வர்த்தக துறை அமைச்சர் திரு.சுரேஷ் பிரபு அவர்களை மத்திய அமைச்சர் திரு. பொன். இராதாகிருஷ்ணன் அவர்கள் நேரில் சந்தித்து, கன்னியாகுமரி மாவட்டத்தில் விமான நிலையம் அமைக்க வேண்டி வலியுறுத்தினார்.
அதற்குஉரிய நடவடிக்கை எடுப்பதாக மத்தியஅமைச்சர்திரு.சுரேஷ் பிரபு அவர்கள் தெரிவித்துள்ளார்.
விரைந்து உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்த மத்திய அமைச்சர் திரு.சுரேஷ் பிரபு அவர்களுக்கு மத்திய நிதி மற்றும் கப்பல்துறை இணையமைச்சர் திரு. பொன். இராதாகிருஷ்ணன் அவர்கள் நன்றி தெரிவித்துக் கொண்டார்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கோணத்தில் இயங்கிவரும் கேந்திர வித்யாலயா மத்திய அரசு பள்ளியை தரம் உயர்த்த வேண்டி மாண்புமிகு மத்திய நிதி மற்றும் கப்பல்துறை இணை அமைச்சர் திரு.பொன்.இராதாகிருஷ்ணன் அவர்கள் முழுமுயற்சி மேற்கொண்டு கடந்த ஆண்டு 1-ம் வகுப்பிற்கு புதிதாக இரண்டு பிரிவுகளும், அதற்கு முந்தைய ஆண்டு 11-ம் வகுப்பிற்கு புதியதாக ஒரு பிரிவிற்கும் அனுமதி பெற்றுக்கொடுத்தார்கள். இந்நிலையில் அப்பள்ளியில் முதல்வர் பதவி காலியாக இருப்பதை அறிந்து உடனடியாக அப்பணியை பூர்த்தி செய்ய மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சரை வலியுறுத்தியதின் காரணமாக அப்பணி நிரப்பப்பட்டது.
மேலும் இப்பள்ளியில் மாணவர்களுக்கு அடிப்படை வசதிகள் தேவை என்பதற்காக மாண்புமிகு மத்திய அமைச்சர் அவர்கள் பாராளுமன்ற உள்ளூர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 20லட்சம் ஒதுக்கீடு செய்து அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும் நிறுவனங்களுக்கான சேவை நிதி தூத்துக்குடி வ.உ.சி துறைமுக கழகத்திலிருந்து ரூபாய் 15 லட்சம் ஒதுக்கீடு செய்து அப்பணிகள் தொடங்குவதற்கான ஆயத்தங்கள் நடந்து வருகின்றன.
இந்நிலையில் நாகர்கோவில் கோணம் கேந்திர வித்யாலயா மேல்நிலைப்பள்ளியில் தற்காலிக ஆசிரியர்கள் கொண்டு வகுப்புகள் நடத்தப்படுவது அறிந்தவுடன் நிரந்தர ஆசிரியர்களை நியமிக்க மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் மாண்புமிகு திரு.பிரகாஷ்ஜாவடேகர் அவர்களிடம் கேட்டுக் கொண்டதற்கிணங்க 16 நிரந்தர ஆசிரியர்கள் நாகர்கோவில் கேந்திர வித்யாலயாவிற்கு நியமிக்கப்பட்டுள்ளனர்.
Source: Sundar S FB
கடந்த ஆண்டு நடைபெற்ற பள்ளி இறுதித் தேர்வான +2 தேர்வில் 1176 மதிப்பெண் பெற்ற அன்புக் குழந்தை செல்வி. அனிதாவின் மரணம் தாங்க இயலா மன வருத்தத்தை தந்துள்ளது.
பரம ஏழைக் குடும்பத்தை சேர்ந்த செல்வி. அனிதாவின் எதிர் கால வளர்ச்சியே தங்கள் வாழ்வென கருதி வளர்த்து படிக்க வைத்த பெற்றோரின் நிலையை எண்ணிப்பார்க்கவே மனம் நடுங்குகிறது.
ஈடு செய்ய இயலாத இந்த அன்புக் குழந்தையின் மறைவிற்கு எனது ஆழ்மனதின் அஞ்சலியை செலுத்துகிறேன்.
அனிதாவை இழந்து வாடும் பெற்றோருக்கு மன அமைதி கிட்ட இறைவனை இறைஞ்சுகிறேன்.
நம் நாட்டின் எதிர்காலமாக திகழும் குழந்தை செல்வங்கள் மனதில் துணிவுடன் எதிர்காலத்தை அணுக வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். உங்கள் நல்வாழ்வே நாட்டின் நலன் என்பதை தாங்கள் உணர வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.
அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகளைச் சேர்ந்த தலைவர்கள் மனவேதனை அடைந்து நிற்கும் மாணவச் செல்வங்களுக்கு மன அமைதியையும், தன்னம்பிக்கையையும் வளர்க்கும் வார்த்தைகளை தவிர்த்து மனத் தளர்வும், நம்பிக்கையின்மையும் ஏற்படும் வகையில் பேசுவதை தவிர்க்கவும் என கேட்டுக் கொள்கிறேன்.
– பொன். இராதாகிருஷ்ணன்

அசுரவம்சத்தில் பிறந்திருந்தாலும் கொடை குணத்தால் நாட்டுமக்களின் நன்மதிப்பை பெற்ற மகாபலி சக்கரவர்த்தியின் செருக்கினை அழித்து அவன் புகழை மேலும் மெருகூட்டிட திருமால் வாமனனாக அவதரித்து மூன்றடி மண் கேட்க, அதற்கு மகாபலி சக்கரவர்த்தி கர்வத்துடன் இசைவளித்தவுடன், திருமால் விஸ்வருபம் கொண்டு முதல் அடியில் பூமியையும், இரண்டாம் அடியில் வானத்தையும் அளந்து மூன்றாம் அடிக்கு மகாபலி சக்கரவர்த்தியின் தலையில் கால் வைத்தசமயம், மகாபலி சக்கரவர்த்தி ஆண்டுதோறும் தன்னுடைய மக்களைக் காண தமக்கு வரம் தர வேண்டும் என்று கோரியதை ஏற்று திருமால் அருள் புரிந்தார் அதன்படி ஒவ்வொரு ஆண்டும் ஆவணி திருவோணத்தன்று மக்களைக் காணவரும் மகாபலி சக்கரவர்த்தியை வரவேற்கும் தினமாக ஓணம் திருநாள் மக்களால் கொண்டாடப்படுகிறது.
அன்பு, ஒற்றுமை, அமைதி, சகிப்புத் தன்மை, சகோதர நேயம், கொடை,பகிர்ந்துண்ணும் பண்பு முதலிய குணங்கள் பேணி வளர்க்கப்பட வேண்டும் என்பதை ஓணம் திருநாள் மனித சமுதாயத்துக்கு உணர்த்துகிறது.
திருவோணத் திருநாளான இந்நன்னாளில், தேசிய சிந்தனை தழைத்து ஓங்கவும் அனைத்து சகோதர, சகோதரிகளும் ஒற்றுமையுடன் மகிழ்ச்சியாக வாழவும் இந்த ஓணம் பண்டிகை வழிகாட்டட்டும்.
எனது நெஞ்சம் நிறைந்த ஓணம் திருநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.
-பொன்.இராதாகிருஷ்ணன்