Category Archives: News

Food Safety Raids on hotels and restaurants in Nagercoil

Food RideNagercoil : Food Safety officials and municipal authorities conducted a surprise raid on hotels, restaurants and roadside eateries in Meenakshipuram here on Tuesday.

The officials, headed by Deputy Food Safety Officer Salodisan, seized and destroyed food items prepared and kept in unhygienic condition.

Expired packets of food ingredients, found in the kitchens of some hotels, were destroyed.

The officials also seized food items that did not have proper labels and adulterated tea powder.

An investigation was launched to find out the origin of adulterated tea powder.

A few hotels were given two weeks’ time to improve the hygiene standard of the kitchens.

Caution notices were issued to some shops for not maintaining hygiene on their premises.

Source : The Hindu

Nagercoil town free from water scarcity

நாகர்கோவிலில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது

Mukkadal-dam-topview

கோடைகாலத்தில் முக்கடல் அணை நிரம்புவது 12 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது நிகழ்வதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்

நாகர்கோவில் நகர மக்களின் குடிநீர் தேவைக்கான ஒரே ஆதாரம் முக்கடல் அணை. குடிநீருக்காகவே பயன்படுத்தப்படும் ஒரே அணையும் இதுதான். நாகர்கோவிலில் இருந்து சுமார் 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இந்த அணை மேற்குத்தொடர்ச்சி மலையடிவாரத்தில் 3 பக்கம் மலைகளால் சூழ்ந்த இடத்தில் அமைந்துள்ளது. இந்த அணையின் மொத்த கொள்ளளவு 25 அடி ஆகும்.

25 அடி என்பது அணையின் தரைமட்ட அளவில் இருந்து கணக்கிடப்பட்ட ஆழம் அல்ல. 25 அடிக்கும் கீழே மைனஸ் நிலையில் 20 அடி ஆழம் உள்ளது. 25 அடிக்கும் கீழே நீர்மட்டம் குறையும்போது நீர் கலங்கலாக இருக்கும். சேறும், சகதியுமாக இருக்கும். எனவே, அணையின் நீர்மட்டம் 25 அடி என்றே கருதப்படுகிறது.

இந்த 25 அடி கொள்ளளவையும் முக்கடல் அணை ஆண்டுதோறும் எட்டுவது இயல்புதான் என்றாலும், கடந்த சில ஆண்டுகளில் அது நிறைவேறாமலும் போயிருக்கிறது. இந்த நிலையில் முக்கடல் அணையின் நேற்றைய நீர்மட்டம் 21.10 அடியாகும். இது, அணையின் வரலாற்று பதிவுகளில் குறிப்பிடத்தக்கதான நீர்மட்டம் ஆகும்.

21 அடியை தாண்டியது அதாவது, தென்மேற்கு பருவமழை காலத்தில்தான் முக்கடல் அணை, முழு கொள்ளளவான 25 அடியை எட்டுவது வழக்கம். ஆனால் கோடை காலத்தில் 20 அடியை தாண்டுவது என்பது எப்போதாவது நிகழும் சம்பவம். கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு இதைப்போல கோடைகாலத்தில் நீர்மட்டம் 21 அடியை தாண்டி இருக்கிறது. அந்த நிலை அணையில் தற்போது நிகழ்ந்திருக்கிறது. அணையின் நேற்றைய நீர்மட்டம் 21.10 அடியாகும். கடந்த சில ஆண்டுகளில், கோடைகாலத்தில் முக்கடல் அணையில் தண்ணீர் வற்றி நாகர்கோவிலில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு, மக்கள் இன்னல்பட்டனர். இந்த நிலையில் இந்த ஆண்டு நாகர்கோவிலில் குடிநீர் தட்டுப்பாடே இல்லாமல் கோடைகாலம் முடிய இருப்பதையும், அதே நேரத்தில் முக்கடல் அணையில் நீர்மட்டம் 21 அடியை தாண்டியதை எண்ணியும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதே நேரத்தில், அணை வற்றும்போது அணையை தூர்வாரி தண்ணீர் கொள்ளளவை உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

Source : Dinathanthi

97.27% Pass Percentage registered by Class 10th of Kanyakumari District.

2015 பத்தாம் வகுப்பு தேர்வில், மாவட்ட அளவிலான தேர்ச்சி விகிதத்தில் கன்னியாகுமரி மாவட்டம் 97.27%  சதவீதத்துடன் நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது.

Kanykumar district 10th result 2015

Kanyakumari District 10th result 2015

Source : Tamil Hindu

 

மார்த்தாண்டம்– ரெயில்நிலையம் சாலையில் சிமெண்டு தளம் அமைக்கும் பணியை பொதுமக்கள் தடுத்ததால் பரபரப்பு

Marthandam:ரெயில் நிலையம் சாலையில் சிமெண்டு தளம் அமைக்கும் பணி மீண்டும் தொடங்கியபோது பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து தடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

சாலைப்பணி

மார்த்தாண்டம்   பஸ் நிலையம் அருகில்  இருந்து குழித்துறை ரெயில் நிலையம் வழியாக ஐரேனிபுரத்திற்கு ஒரு சாலை செல்கிறது இந்த    சாலையை சீரமைக்கும் பணி தொடங்கியது. இதற்காக மார்த்தாண்டத்தில் இருந்து ரெயில் நிலையம் வரை 500 மீட்டர் தூரம் சிமெண்டு தளம் அமைக்கவும், ரெயில் நிலையத்தில் இருந்து ஐரேனிபுரம் வரை தார்தளம் அமைக்கவும் நெடுஞ்சாலைதுறை சார்பில் ரூ. 1 கோடி அனுமதிக்கப்பட்டது.

அதன்படி ரெயில்நிலையம் பகுதியில் இருந்து ஐரேனிபுரம் வரை சாலையில் தார்போடும் பணி நடந்து முடிந்தது. மார்த்தாண்டத்தில் இருந்து ரெயில் நிலையம் வரை சிமெண்டு  தளம் போட பணிகள் தொடங்கப்பட்டது. அப்போது, அந்தபகுதியில் கழிவுநீர் ஓடை அமைக்கவும், பக்க ஓடைகள் தரமானதாக  அமைக்கவும் வலியுறுத்தி பொது மக்கள் முற்றுகை போராட்டம் நடத்தினர். இதனால் வேலை நிறுத்தப் பட்டது.

மீண்டும் தொடங்கியது

அதன் பின்னர், நேற்று மார்த்தாண்டம் ரெயில் நிலைய சாலை தொடங்கும் இடத்தில் சாக்கடை கால்வாய்  இணைப்பிற்காக சிமெண்டு குழாய் பதித்து சாலை பணி மீண்டும் தொடங்கப்பட்டது.

ஆனால், சிமெண்டு குழாய் போடுவதால் தரம் இருக்காது எனக்கூறி அந்த பகுதி மக்களும், ரெயில் நிலைய ஆட்டோ டிரைவர்களும் எதிர்ப்பு தெரிவித்து பணியை தடுத்தனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

பேச்சுவார்த்தை

அதைத்தொடர்ந்து நெடுஞ்சாலை உதவி பொறியாளர் ராமச்சந்திரன், நல்லூர் பேரூராட்சி தலைவர் செல்வராஜ் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையை தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். பின்னர், கழிவுநீர் ஓடையில் சிமெண்டு குழாய் பதிக்கும் பணியும், சாலையில் சிமெண்டு தளம் அமைக்கும் பணியும் தொடங்கியது.

Source : Daily thanthi

மார்த்தாண்டத்தில் மேம்பாலம் அமைப்பதற்கான மண் ஆய்வுப்பணி

Marthandam flyover : மார்த்தாண்டத்தில் மேம்பாலம் அமைப்பதற்கான மண் ஆய்வுப்பணி தொடங்கி நடந்து வருகிறது.போக்குவரத்து நெருக்கடிகுமரி மாவட்டத்தில் 2-வது பெரிய நகரமாக மார்த்தாண் டம் விளங்குகிறது. இங்கு பள்ளிகள், கல்லூரிகள், அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள், வர்த்தக மையங்கள், மற்றும் தினசரி சந்தை போன்றவை அமைந்துள்ளன. மார்த்தாண் டம் பகுதிக்கு சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள், மாணவ-மாணவிகள் தினமும் வந்து செல்கிறார்கள்.மார்த்தாண்டத்தில் அமைந் துள்ள தேசிய நெடுஞ்சாலை மிகவும் குறுகலாக அமைந் துள்ளது. இதனால், எப் போதும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு வருகிறது.தொடரும் போக்குவரத்து நெருக்கடியால், திருவனந்த புரம், கன்னியாகுமரி போன்ற முக்கியமான பகுதிகளுக்கும், திருவனந்தபுரம் விமான நிலையத்திற்கு செல்பவர் களும், ரெயில் நிலையத் திற்கு செல்பவர்களும், மாணவ- மாணவிகளும், பொதுமக்க ளும் குறித்த நேரத்தில் செல்ல முடியாமல் தவிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். அத்துடன் கடும் போக்குவரத்து நெருக் கடியால் விபத்துகளும் ஏற்பட்டு வருகின்றன.மேம்பாலம்இந்தநிலையில் மார்த் தாண்டம் போக்குவரத்து நெருக்கடிக்கு தீர்வு காண மாற்று ஒருவழிப்பாதை அமைக்க வேண்டும் என பொதுமக்களும், அரசியல் கட்சியினரும் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகிறார்கள். ஆனால், அந்த கோரிக்கை இதுவரை நிறைவேற்றப்படவில்லை.இதற்கிடையே மார்த்தாண் டம் தேசிய நெடுஞ்சாலையில் பம்மம் பகுதியில் இருந்து அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வரை மேம்பாலம் அமைக்க திட்டமிடப்பட் டுள்ளதாக கூறப்படுகிறது.அதன் ஒருகட்டமாக மார்த்தாண்டம் சந்திப்பு பகுதியில் நெடுஞ்சாலைதுறை சார்பில் மண் ஆய்வு செய்யும் பணி தொடங்கப் பட்டுள்ளது. இதற்காக ஆழ்துளை போடப்படும் எந்திரம் மூலம், ஊழியர்கள் மண் ஆய்வு செய்து வருகிறார்கள். மண் ஆய்வுப்பணி தொடங்கி உள்ளதால் மார்த் தாண்டத்தில் மேம்பாலம் அமைக்கும் பணிகள் விரைவில் தொடங்கலாம் என பொதுமக்கள் மத்தியில் மகிழ்ச்சியும், எதிர்பார்ப்பும் உருவாகி உள்ளது

Source : Daily Thanthi

குமரி மாவட்டத்துக்கு வருகிற 4, 10-ந் தேதிகளில் உள்ளூர் விடுமுறை

கலெக்டர் சஜ்ஜன்சிங் சவான் அறிவிப்பு

Kanyakumari District Local Holiday : வருகிற மார்ச் 4 மற்றும் 10-ந் தேதிகளில் குமரி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அளித்து கலெக்டர் சஜ்ஜன்சிங் சவான் உத்தரவிட்டுள்ளார்.இதுகுறித்து குமரி மாவட்ட கலெக்டர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-அய்யா அவதார தினவிழாஅய்யா வைகுண்டர் அவதார தினவிழா நாளான வருகிற 4-ந் தேதி அன்று குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், அரசு சார்ந்த அலுவலகங்கள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது. 4-ந் தேதி அறிவிக்கப்பட்டுள்ள உள்ளூர் விடுமுறைக்கு ஈடாக வருகிற ஏப்ரல் மாதம் 3-வது சனிக்கிழமையான 18-ந் தேதி அன்று குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் வேலை நாளாகும்.மண்டைக்காடு கோவில் கொடைவிழாமண்டைக்காடு பகவதியம்மன் கோவில் மாசிக்கொடை விழாவின் முக்கிய திருவிழா நாளான 10-ம் திருவிழாவன்று (வருகிற 10-ந் தேதி) குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், அரசு சார்ந்த அலுவலகங்கள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது. 10-ந் தேதி அன்று அறிவிக்கப்பட்டுள்ள உள்ளூர் விடுமுறைக்கு ஈடாக மே மாதம் 2-வது சனிக்கிழமையான 9-ந் தேதி அன்று குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், அரசு சார்ந்த அலுவலகங்கள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் வேலை நாளாகும். 4-ந் தேதி மற்றும் 10-ந் தேதிகளில் அறிவிக்கப்பட்டுள்ள உள்ளூர் விடுமுறை தினத்தன்று குமரி மாவட்டத்தில் தலைமைக் கருவூலம் மற்றும் கிளைக் கருவூலங்கள், அரசு ஈடுபாடு சம்பந்தப்பட்ட அவசரப் பணிகளை கவனிக்கும் பொருட்டு தேவையான பணியாளர்களைக் கொண்டு இயங்கும்.இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் கலெக்டர் சஜ்ஜன்சிங் சவான் தெரிவித்துள்ளார்.

Source : Dailythanthi

நாகர்கோவில்: முக்கிய சாலை சந்திப்புகளில் போக்குவரத்தை சீர் செய்யும் சராசரி மனிதர்

Nagercoil: கொட்டும் மழை, அடிக்கின்ற வெயில் என மாறி, மாறி மிரட்டும் சீதோஷ்ண நிலைகளுக்கு மத்தியில், நாகர்கோவிலின் முக்கிய பகுதிகளில் போக்குவரத்து காவலர்களோடு கைகோர்த்து, முழுக்க, முழுக்க சேவை மனப்பான்மையோடு போக்குவரத்தை சீர் செய்கிறார் நாகர்கோவிலை சேர்ந்த விஜயன் (50). அதுவும் இன்று நேற்றல்ல, கடந்த 3 ஆண்டுகளாக என்பதுதான் ஆச்சர்யம்.

nagercoil-trafficநாகர்கோவில் வேப்பமூடு சந்திப்பில் போக்குவரத்தை ஒழுங்கு செய்து கொண்டிருந்த விஜயனிடம் பேசினோம். `நாகர் கோவிலை அடுத்துள்ள சித்திரை திருமகாராஜபுரம் என்னோட சொந்த ஊரு. திருமணம் ஆகல்ல. அம்மா, அப்பா இருந்த வரைக்கும் தனியார் நிறுவன செக்யூரிட்டியா வேலை பார்த்தேன். அவங்க இறந்த பின்னாடி எனக்கு பணத் தேவை குறைஞ்சிடுச்சு.

பிழைப்புக்காக ஏதோ ஒரு நிறுவனத்தில் வேலை செய்வதிலும் எனக்கு உடன்பாடு இல்லை. அதனால் ஒரு சேவை யாக போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் ஈடுபடத் தொடங்கினேன். முழுசா 3 வருஷம் தாண்டிடுச்சு.

தினமும் காலையில் 8 மணிக்கு வந்துடுவேன். 11 மணி வரை போக்குவரத்தை சீர் செய்வேன். பின்னர் மாலை 5 மணிக்கு வந்து விட்டு இரவு 8 மணி வரை போக்குவரத்தை சீர் செய்வேன். வேப்பமூடு, கோட்டாறு, செட்டிக்குளம் பகுதிகளில் மாறி, மாறி டியூட்டி பார்ப்பேன். பணியில் இருக்கும் போக்குவரத்து போலீஸார் டீ, காபி, வடைன்னு சாப்பிட ஏதாவது வாங்கித் தருவாங்க. தினமும் இரவு நாகர்கோவிலில் இருக்கும் என்னோட மாமா வீட்டுல போய் படுத்துப்பேன்.

செக்யூரிட்டியா இருக்கும் போது வாங்குன காக்கி சட்டை, பேன்டை போட்டுக்குவேன். போக்குவரத்து நெரிசல் அதிகம் இருக்கும் பகுதிகளில் நின்று கொண்டு வாகனங்களை நிறுத்தும் போது சிலர் மதித்து நடப்பர். சிலர் வித்தியாசமாக கூட பார்த்துட்டு போவாங்க.

யார் எப்படி நினைச்சாலும் எனக்கு கவலையில்லை. எனக்கு இந்த வேலை திருப்தியாய் இருக்கிறது” என்றவர் சாலை சீரமைப்பு பணிகளில் மூழ்கினார்.

<span style=”display:none;”>The average person will smooth traffic on the main road junctions</span>

ஓ.பி.சி. மாணவர்களுக்கு மாதம் ரூ.25 ஆயிரம் உதவித்தொகை

யுஜிசி என அழைக்கப்படும் பல்கலைக்கழக மானியக் குழுவானது ஆதி திராவிடர், பழங்குடியின மாணவர்கள், கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் உள்ளிட்ட சிறுபான்மையினர், பெண்கள் உள்ளிட்டோருக்குப் பல்வேறு விதமான கல்வி உதவித்தொகைகளை (Fellowship) வழங்கிவருகிறது.

தற்போது, முதல்முறையாக இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பு (Other Backward Class-OBC) மாணவ-மாணவிகளுக்குப் புதிய கல்வி உதவித்தொகை திட்டத்தை இந்த ஆண்டு அறிமுகப்படுத்தியுள்ளது.

எம்.ஃபில். பிஎச்.டி. (முனைவர் பட்டம்) படிப்பதற்கு இந்த உதவித்தொகை கிடைக்கும். கலை, சமூக அறிவியல், அறிவியல், பொறியியல், தொழில்நுட்பம் ஆகிய படிப்புகளுக்கு உதவித்தொகை பெறலாம். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.6 லட்சத்துக்குள் இருக்க வேண்டும்.

(விண்ணப்பதாரர்கள் யுஜிசி அல்லது அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி (சிஎஸ்ஐஆர்) நிறுவனத்தின் ஜெஆர்எஃப் உதவித்தொகை பெறக்கூடாது என்பது ஒரு நிபந்தனை). ஆண்டுதோறும் 300 ஓபிசி மாணவர்களுக்கு உதவித்தொகைகளை வழங்க யுஜிசி முடிவு செய்துள்ளது. இதில் 3 சதவீதம் மாற்றுத் திறனாளிகளுக்கு ஒதுக்கப்பட்டிருக்கிறது.

தகுதி அடிப்படையில் தேர்வுசெய்யப்படும் மாணவர்களுக்கு முதல் 2 ஆண்டுகளுக்கு மாதந்தோறும் கல்வி உதவித்தொகையாக ரூ.25 ஆயிரம் கிடைக்கும். அத்துடன் எதிர்பாராத செலவுக்காக ஆண்டுக்கு ரூ.10 ஆயிரமும் (கலை படிப்புகள்), ரூ.12 ஆயிரமும் (அறிவியல், பொறியியல், தொழில்நுட்பம்) வழங்கப்படும்.

இரண்டு ஆண்டுகள் முடிந்த பின்பு கல்வி செயல்பாடுகள் திருப்தியாக இருக்கும் பட்சத்தில் அடுத்த 3 ஆண்டுகளுக்கு மாதம்தோறும் ரூ.28 ஆயிரம் கிடைக்கும். அதோடு எதிர்பாராத செலவினங்களுக்காகக் கலைப் படிப்புகளுக்கு ஆண்டுக்கு ரூ.20,500-ம், அறிவியல், பொறியியல் மற்றும் தொழில்நுட்பப் படிப்புகளுக்கு ரூ.25 ஆயிரமும் வழங்கப்படும்.

இந்த உதவித்தொகை விண்ணப்பதாரரின் வங்கிக்கணக்குக்கு ஆன்லைனில் நேரடியாக (E-payment) வந்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தக் கல்வி ஆண்டின் உதவித்தொகையைப் பெறுவதற்கு வரும் பிப்ரவரி மாதம் 10-ம் தேதிக்குள் ஆன்லைனில் (www.ugc.ac.in) விண்ணப்பிக்க வேண்டும் என்று யுஜிசி அறிவித்துள்ளது.

ஓ.பி.சி. வகுப்பினர் யார்?

பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவர்களின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.6 லட்சத்துக்குள் இருக்கும் நபர்கள் ஓ.பி.சி பிரிவின் கீழ் வருவார்கள். பி.சி (Backward Class ), எம்.பி.சி (Most Backward Class) பிரிவைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், ஆண்டு வருமானம் ரூ.6 லட்சத்தைத் தாண்டிவிட்டால் அவர்கள் ஓ.பி.சி. வகுப்பினராகக் கருதப்பட மாட்டார்கள்.

ஓபிசி வகுப்பினருக்கான சான்றிதழைத் தாசில்தார் வழங்குவார். இதற்கு உரிய படிவத்தில், தேவையான ஆவணங்களுடன் கிராம நிர்வாக அதிகாரி, வருவாய் ஆய்வாளர் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும்.