கன்னியாகுமரி மாவட்டம் தோப்புவிளை முத்துமாரியம்மன் கோயில் கலையரங்கம் அடிக்கல் நாட்டு விழா (பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி 6 லட்சம் ஒதுக்கீடு)

கன்னியாகுமரி மாவட்டம் தோப்புவிளை முத்துமாரியம்மன் கோயில் கலையரங்கம் அடிக்கல் நாட்டு விழா (பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி 6 லட்சம் ஒதுக்கீடு)

மண்டைக்காடு சாஸ்தா கோயில் அருகே உயர்கோபுர மின்விளக்கு மக்களின் பயன்பாட்டிற்கு அர்ப்பணித்த போது (நிதி ஒதுக்கீடு 3 லட்சம்)

கடந்த ஆண்டு நடைபெற்ற பள்ளி இறுதித் தேர்வான +2 தேர்வில் 1176 மதிப்பெண் பெற்ற அன்புக் குழந்தை செல்வி. அனிதாவின் மரணம் தாங்க இயலா மன வருத்தத்தை தந்துள்ளது.
பரம ஏழைக் குடும்பத்தை சேர்ந்த செல்வி. அனிதாவின் எதிர் கால வளர்ச்சியே தங்கள் வாழ்வென கருதி வளர்த்து படிக்க வைத்த பெற்றோரின் நிலையை எண்ணிப்பார்க்கவே மனம் நடுங்குகிறது.
ஈடு செய்ய இயலாத இந்த அன்புக் குழந்தையின் மறைவிற்கு எனது ஆழ்மனதின் அஞ்சலியை செலுத்துகிறேன்.
அனிதாவை இழந்து வாடும் பெற்றோருக்கு மன அமைதி கிட்ட இறைவனை இறைஞ்சுகிறேன்.
நம் நாட்டின் எதிர்காலமாக திகழும் குழந்தை செல்வங்கள் மனதில் துணிவுடன் எதிர்காலத்தை அணுக வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். உங்கள் நல்வாழ்வே நாட்டின் நலன் என்பதை தாங்கள் உணர வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.
அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகளைச் சேர்ந்த தலைவர்கள் மனவேதனை அடைந்து நிற்கும் மாணவச் செல்வங்களுக்கு மன அமைதியையும், தன்னம்பிக்கையையும் வளர்க்கும் வார்த்தைகளை தவிர்த்து மனத் தளர்வும், நம்பிக்கையின்மையும் ஏற்படும் வகையில் பேசுவதை தவிர்க்கவும் என கேட்டுக் கொள்கிறேன்.
– பொன். இராதாகிருஷ்ணன்

அசுரவம்சத்தில் பிறந்திருந்தாலும் கொடை குணத்தால் நாட்டுமக்களின் நன்மதிப்பை பெற்ற மகாபலி சக்கரவர்த்தியின் செருக்கினை அழித்து அவன் புகழை மேலும் மெருகூட்டிட திருமால் வாமனனாக அவதரித்து மூன்றடி மண் கேட்க, அதற்கு மகாபலி சக்கரவர்த்தி கர்வத்துடன் இசைவளித்தவுடன், திருமால் விஸ்வருபம் கொண்டு முதல் அடியில் பூமியையும், இரண்டாம் அடியில் வானத்தையும் அளந்து மூன்றாம் அடிக்கு மகாபலி சக்கரவர்த்தியின் தலையில் கால் வைத்தசமயம், மகாபலி சக்கரவர்த்தி ஆண்டுதோறும் தன்னுடைய மக்களைக் காண தமக்கு வரம் தர வேண்டும் என்று கோரியதை ஏற்று திருமால் அருள் புரிந்தார் அதன்படி ஒவ்வொரு ஆண்டும் ஆவணி திருவோணத்தன்று மக்களைக் காணவரும் மகாபலி சக்கரவர்த்தியை வரவேற்கும் தினமாக ஓணம் திருநாள் மக்களால் கொண்டாடப்படுகிறது.
அன்பு, ஒற்றுமை, அமைதி, சகிப்புத் தன்மை, சகோதர நேயம், கொடை,பகிர்ந்துண்ணும் பண்பு முதலிய குணங்கள் பேணி வளர்க்கப்பட வேண்டும் என்பதை ஓணம் திருநாள் மனித சமுதாயத்துக்கு உணர்த்துகிறது.
திருவோணத் திருநாளான இந்நன்னாளில், தேசிய சிந்தனை தழைத்து ஓங்கவும் அனைத்து சகோதர, சகோதரிகளும் ஒற்றுமையுடன் மகிழ்ச்சியாக வாழவும் இந்த ஓணம் பண்டிகை வழிகாட்டட்டும்.
எனது நெஞ்சம் நிறைந்த ஓணம் திருநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.
-பொன்.இராதாகிருஷ்ணன்