Mar 30, 2017 Accident, Knayakumari district News, News, Thuckalay 0
After the very sorrowful incident of 5 College students (Ayyappa College for Women) killed in an accident last week in thuckalay nagercoil, another accident in took place today killed one person in a Car – Mini Bus Collision. Below accident photos from the spot
தக்கலை அருகே மினி பஸ்சும், காரும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் டிவி காமெடி நடிகர் உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார். வங்கி ஊழியர் படுகாயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். திருவனந்தபுரம் அருகே உள்ளது பேயாடு செறுவாறை மகாவிஷ்ணு கோயில். இந்த கோயில் பிரதிஷ்டை நிகழ்ச்சிக்கு தேவையான பூக்களை வாங்குவதற்காக கோயில் நிர்வாகிகள் காரில் தோவாளை பூ மார்க்கெட்டுக்கு வந்தனர். அங்கு தேவையான பூக்களை வாங்கினர். அவற்றை கொண்டு செல்வதற்காக மற்றொரு காரில் செறுவாறை பேயாடு பகுதியை சேர்ந்த அனிஷ்குமார் (31), குமார் (21) ஆகியோரும் வந்தனர். காரை அனிஷ்குமார் ஓட்டினார். பூக்களுடன் அவர்கள் திருவனந்தபுரம் நோக்கி சென்று கொண்டிருந்தனர். அவர்களது காருக்கு பின்னால் கோயில் நிர்வாகிகளின் கார் சென்றது. நேற்று காலை சுமார் 6.30 மணியளவில் தக்கலை பஸ் நிலையம் அருகே ஆர்டிஓ அலுவலக பகுதியில் வரும்போது அழகியமண்டபத்தில் இருந்து தக்கலை பஸ் நிலையம் நோக்கி வந்த மினி பஸ்சும்- பூக்களுடன் சென்ற காரும் நேருக்கு நேர் பயங்கரமாக மோதிக்கொண்டன. இதில் காரின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது. இடிபாடுகளில் சிக்கி உடல் நசுங்கி அனிஷ்குமார் சம்பவ இடத்திலேயே இறந்தார். படுகாயமடைந்து ரத்த வெள்ளத்தில் கிடந்த குமாரை அந்த பகுதி மக்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் தக்கலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். விபத்து நடந்ததும் மினிபஸ் டிரைவர் தப்பி ஓடிவிட்டார். மினிபஸ்சில் பயணிகள் யாரும் இல்லை. விபத்து குறித்த தகவல் அறிந்ததும் தக்கலை தீயணைப்பு நிலைய வீரர்கள், போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அதைத் தொடர்ந்து இடிபாடுகளில் சிக்கி இறந்து கிடந்த அனிஷ்குமார் உடலை மீட்கும் முயற்சியில் இறங்கினர். பல முயற்சிகள் செய்தும் உடலை மீட்க முடியவில்லை. பின்னர் நொறுங்கி கிடந்த காரை முன்னும் பின்னுமாக 2 வாகனங்களில் கட்டி இழுத்து, உடலை மீட்டு தக்கலை மருத்துவமனைக்கு அனுப்பினர். இதனால் சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து மினிபஸ் டிரைவர் குமாரபுரம் புளியறைவிளையை சேர்ந்த ஜஸ்டின் கிறிஸ்டோபர்(40) மீது தக்கலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த விபத்தில் இறந்த அனிஷ்குமார் ஒரு சமையல் கலைஞர் மற்றும் மிமிக்ரி கலைஞர். மலையாள டிவி காமெடி நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்தார். குமார் ஒரு தனியார் வங்கியில் வேலை செய்கிறார். இருவரும் கம்யூனிஸ்ட் வாலிபர் சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ளனர். விபத்தில் சிக்கி டிவி காமெடி கலைஞர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Apr 18, 2017 0
Jan 23, 2019 0
Sep 20, 2018 0
This architectural pilgrim centre derive its name from the Virgin goddess Kanyakumari, to whom the temple is dedicated. Goddess Parashakti (Devi Kanya) did punishment to protect shiva's hand in a marriage. She sweared to remain a virgin as she couldn't attain her objective...