Pechiparai Dam

பேச்சிப்பாறை(Pechiparai) அணைத்தண்ணீர் பாசனத்துக்காக திறக்கப்பட்டது

Pechiparai Damபாசனத்துக்காக திறக்கப்பட்ட பேச்சிப்பாறை அணைத்தண்ணீர் தோவாளை சானலுக்கு வந்து சேர்ந்தது. 216 கனஅடி திறப்பு குமரி மாவட்டத்தில் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றார்-1, சிற்றார்-2, பொய்கை, மாம்பழத்துறையாறு, முக்கடல் ஆகிய அணைகள் உள்ளன. இதில் முக்கடல் அணையைத்தவிர மற்ற அணைகள் அனைத்தும் பொதுப்பணித்துறை (நீர்வள ஆதார அமைப்பு) கட்டுப்பாட்டிலும், குடிநீருக்காக மட்டுமே பயன்படுத்தப்படும் முக்கடல் அணை நாகர்கோவில் நகராட்சி நிர்வாக கட்டுப்பாட்டிலும் இருந்து வருகிறது. ஆண்டுதோறும் பேச்சிப்பாறை உள்ளிட்ட அணைகள் பாசனத்துக்காக ஜூன் மாதம் திறக்கப்பட்டு, பிப்ரவரி மாத இறுதியில் மூடப்படுவது வழக்கம். இந்தநிலையில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா உத்தரவுப்படி நேற்று முன்தினம் பேச்சிப்பாறை அணை திறக்கப்பட்டது. கோடை மழை தொடர்ந்து பெய்ததின் காரணமாக நேற்று முன்தினம் அணையின் நீர்மட்டம் 40.58 அடியாக இருந்தது. முதல்நாளான நேற்று முன்தினம் பேச்சிப்பாறை அணையில் இருந்து வினாடிக்கு 200 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது. நேற்று கூடுதலாக 16 கன அடி தண்ணீர், அதாவது 216 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது.

விவசாயிகள் மும்முரம் பேச்சிப்பாறை அணையில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் நேற்று மதியம் தோவாளை சானல் தொடங்கும் பகுதியான செல்லந்துருத்தியை தாண்டி காட்டுப்புதூருக்கு வந்தது. மாலையில் சீதப்பால் பகுதிக்கு வந்து சேர்ந்தது.

அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டதைத் தொடர்ந்து விவசாயிகள் கன்னிப்பூ சாகுபடியை மேற்கொள்வதற்கான பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றனர். பல்வேறு பகுதிகளில் விவசாய நிலங்களில் பணியை விவசாயிகள் தொடங்கினர். விரைவில் நடவுப்பணியை மேற்கொள்வார்கள் என்று வேளாண்மைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

நேற்றைய நிலவரப்படி பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் 40.40 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 202 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் 72.67 அடியாக உள்ளது. அணைக்கு 79 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது.

சிற்றார்-1 அணை நீர்மட்டம் 17.06 அடியாகவும்,
சிற்றார்-2 அணையின் நீர்மட்டம் 17.16 அடியாகவும்,
பொய்கை அணையின் நீர்மட்டம் 9 அடியாகவும்,
மாம்பழத்துறையாறு அணை நீர்மட்டம் முழுகொள்ளளவான 54.12 அடியாகவும் உள்ளன. இந்த அணைக்கு 4 கன அடி தண்ணீர் வருகிறது. அந்த 4 கன அடி தண்ணீரும் உபரியாக வெளியேற்றப்படுகிறது.

Source : Dinathanthi

Pechiparai Dam (Pechiparai Reservoir) கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பெரிய அணையாகும். இது மேற்குத் தொடர்ச்சி மலைகளால் சூழப்பட்டுள்ளது.இது மாவட்டத் தலைநகர் நாகர்கோவிலிலிருந்து 43 கிலோமீட்டர் (27 மைல்) தொலைவில் அமைந்துள்ளது. இவ் அணை கோதையாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது. இந்த அணை 1897-1906 காலக்கட்டத்தில் ஐரோப்பிய பொறியாளர் திரு மிஞ்சின் அவர்களால் அப்போதைய திருவிதாங்கூர் மகாராசா மூலம் திருநாள் காலத்தில் கட்டப்பட்டது.இதன் அப்போதைய கட்டுமானத்திற்காக செலவளிக்கப்பட்ட தொகை 26.1 லட்சம். இவ்வணை கன்னியாகுமரி மாவட்டத்தின் விவசாய மற்றும் குடிநீர் தேவையை பூர்த்தி செய்கின்றது. இவ்வணை மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடர் அடிவாரத்தில் கட்டப்பட்டுள்ளது. இந்த அணையின் உயரம் முதலில் 42 அடியாக இருந்தது. பின்பு 1964-ஆம் ஆண்டு மேலும் 6 அடிகள் கூட்ட முடிவு செய்து 1969 ஆம் ஆண்டு அணையின் உயரம் 48 அடியாக கட்டிமுடிக்கப்பட்டது. கல்குளம், அகத்தீசுவரம், தோவாளை மற்றும் ராதாபுரம் ஆகிய வட்டங்கள் இதன் மூலம் பலன் பெறுகின்றன. சுமார் 50 ஆயிரம் ஏக்கர் நிலம் இதனால் பாசன வசதி பெறுகின்றது. இதன் நீர்ப்பிடிப்பு பகுதி 207.19 சதுர கிலோமீட்டர்கள் ஆழம் 14.6 மீட்டர்கள் ( 48 அடி). அணையின் நீளம் 425.5 மீட்டர்கள் உயரம் 120.7 மீட்டர்கள்

Source : Wikipedia

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *